1எம்டிபி-இன் கணக்குகளைத் தணிக்கை செய்யக் காரணமில்லை

ambrin1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தின்  கணக்குகளை  அனைத்துலக  அளவில்  பெயர்பெற்ற  பெரிய  நிறுவனங்கள்  ஏற்கனவே  தணிக்கை  செய்திருப்பதால்  தாம்  அதைத் தனியே  தணிக்கை  செய்ய  “காரணம்  ஏதுமில்லை”  எனத்  தலைமைக்  கணக்காய்வாளர்  அம்ப்ரின்  புவாங்  கூறினார்.

“ஏன்  நாங்கள்  1எம்டிபி கணக்குகளைத்  தணிக்கை  செய்யவில்லை? ஏற்கனவே  பெரிய  நிறுவனங்கள்  தணிக்கை  செய்து  விட்டன  என்பதுதான்  என்னுடைய  பதிலாகும்”.

இன்று  ஊடகச்  சந்திப்பின்போது,  சர்ச்சைக்குரிய  1எம்டிபி  கணக்குகளை  ஏன்  தணிக்கை  செய்யவில்லை  என்று  கேட்கப்பட்டதற்கு  அம்ப்ரின்  இவ்வாறு  பதிலளித்தார்.