தென் பிலிப்பின்சுக்குக் கடத்திச் செல்லப்பட்டு ஐந்து மாதங்களாக அங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சாபாவைச் சேர்ந்த மீன் வளர்ப்புப் பண்ணை உரிமையாளர் ஒருவரையும் ஒரு போலீஸ்காரரையும் விடுவிப்பதற்குக் கடத்தல்காரர்கள் கேட்கும் பிணைப்பணத்தைக் கொடுக்க அரசாங்கம் தயங்குவது ஏன் என்று எதிரணி எம்பி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எத்தனையோ காரியங்களுக்கு பில்லியன் கணக்கில் செலவிடுகிறார்கள், இரு உயிர்களைக் காக்க ரிம6 மில்லியன் கொடுக்க முடியாதா?”, என லுமுட் எம்பி இம்ரான் அப்துல் ஹமிட் வினவினார்.
அவருடன் இன்னும் சில பக்கத்தான் எம்பிகளும் சேர்ந்துகொண்டு, கடத்தப்பட்ட சாபாகாரர்களை விடுவிக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினர்.
மனம் இல்லைதான். என்ன செய்யமுடியும் ?
ஒரு தொழிலதிபர்கே இப்படியானால்,பொதுமக்களுக்கு.இது அரசு கவனக்குறைவே அல்லது அலட்சியபோக்கே காரணம்,அரசு மெளனம் வேறு ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்குமோ சந்தேகம்,நாராயண நாராயண.