கிளந்தானில் “தலைவெட்டும்” இயந்திரம் பயன்படுத்தப்படலாம்

PAS guillotine1

கிளாந்தானில் ஹூடுட் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுபவர்களின் உறுப்புகளைத் துண்டிப்பதற்கு 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட தலைவெட்டும் உபகரணம் பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் மருத்துவர்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படலாம் என்று இன்றைய த ஸ்டார் செய்தி கூறுகிறது.

கிளந்தான் மாநில துணை மந்திரி புசார் நிக் முகமட் நிக் அப்துல்லா இவ்வாறு கூறியதாக அந்நாளிதழ் கூறுகிறது.

இதற்கு முன்னதாக, மலேசிய மருத்துவர் மன்றம் உறுப்புகளைத் துண்டிக்கும் கிளந்தான் அரசின் திட்டத்தை குறைகூறியுள்ளது.

PAs Nik Amarதலைவெட்டும் முறை பிரான்ஸ் நாட்டில் 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தி அந்நாட்டு மன்னரின் தலை guillotine_15229_lgவெட்டப்பட்டது. பிரான்ஸ்சில் இம்மாதிரி தலைவெட்டும் முறை கடைசியாக 1977 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. ஹமிடா டெஜாண்டௌபி என்ற துனிசியர் அவ்வாறு கொல்லப்பட்டார்.

கிளந்தான் மாநில ஹூடுட் நிபுணத்துவக் குழு இது குறித்து விவாதிக்கவுள்ளது.

“அடுத்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டு அந்த சிறிய-தலைவெட்டும் முறை பற்றி துள்ளியமாக விவாதிக்க திட்டமிட்டுள்ளேன்”, என்று அவர் கூறியதாக அந்நாளிதழ் அவரை மேற்கோள் காட்டியுள்ளது.

மருத்துவர்களின் தேவை இன்னும் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.