கிளந்தான் அரசு‘கில்லடினை’(வெட்டுக் கருவி)ப் பயன்படுத்தும் முடிவில் இருப்பதுபோல் ஊடகங்கள் கதை கட்டிவிட்டிருப்பதாக பாஸ் கிளந்தான் குற்றம் சாட்டியுள்ளது.
எம்ஸ்டார் ஆன்லைன் செய்திக்காக தொலைபேசிவழி நடத்தப்பட்ட நேர்காணலின்போது கில்லடினைப் பயன்படுத்தும் கருத்தை முன்வைத்தவரே அதன் நிருபர்தான் என கிளந்தான் துணை மந்திரி புசாரின் தனிச் செயலாளர் முகம்மட் கைரில் ஹஸ்மி யூசுப் கூறினார்.
“அதற்கு துணை எம்பி அமார் அப்துல்லா அதை ஜுடுட் குழுவுடன் விவாதிப்பதாகக் கூறினார். அவ்வளவுதான்”, என கைரில் குறிப்பிட்டார்.
இல்லாததைச்சொல்வதுதானே அம்னோ வின் வேலை.அம்னோவில் இதெல்லாம் சகஜம்மப்பா.
எது எப்படி இருப்பினும் மீண்டும் கற்காலத்துக்கு திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் கிளந்தான் முஸ்லீம் ஆட்சியாளர்கள்.இந்த நாட்டில் சீனர்களும் இந்தியர்களும் இல்லாதிருந்தால் மலேசியாவும் ஒரு ஆப்கானிஸ்தான்தான்.