பக்கத்தான் தலைவர் மன்றக் கூட்டங்களில் பாஸ் தலைவர் கலந்துகொள்ளாதது பற்றிக் கேள்வி எழுப்பும் டிஏபி-யை பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் சாடினார்.
ஹாடி கூட்டங்களுக்கு வரவில்லை என்றால், அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்றாரவர்.
“அவர் உடல்நலம் குன்றியிருக்கலாம். நோயுற்றிருப்பரை ஏன் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்துகிறீர்கள்?
“அது மடத்தனம்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்குமுன் டிஏபி மத்திய செயல்குழு, ஹாடி பக்கத்தான் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது.
இது மடத்தனம் அல்ல,ஒரு கட்சியின் தலைவர் ஒரு கூட்டதிர்கு வராமல் இருந்தால் கேள்வி வரத்தான் செய்யும்.இதை கேக்க கூடாது என்று சொன்னால் எப்படி?அதுவும் கூட்டனி ,கூட்டனி வைதுகொல்வேன் ஆனால் கூட்டதிர்கு வரமாட்டேன் யாரும் ஜாகன் புகா மூலுட் .
பாஸ் கட்சிக்கு துதிப்பான தலை இல்லாதது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்ப்படுத்தும்
பாஸ்சை கேவலபடுத்துவது சிறுமைபடுத்துவது,உடமையை திருடுவது கூட்டணி ஒழுக்கமோ,அழைப்பதன் காரணம் உடுட்டை நிறுத்தவே,அன்று தேவைபடாத பாஸ் இன்று எப்படி தேவைபட்டது.கறிவேப்பில்லையாக பாஸ் விரும்பவில்லை,வாழ்க நாராயண நாமம்.
கூட்டணியா? அல்ல கூத்தணியா?.
தற்போது பாஸ் கட்சிக்கு ஹாடி அவாங் பொருத்தமான தலைவரே அல்ல.
PAS கட்சி ஒரு பெயில் கட்சி
paas இல்லாமல்,DAP யும்,அடிளானும் முடிவெடுத்து காரியம்
சாதிக்க வேண்டியதுதான்.
தோக் குரு மறை கழண்ட மாதிரி கருத்து சொல்கிறார் ! அடுத்த பொது தேர்தலுக்கு முன் பாசை பாகத்தான் கலட்டி விடவேண்டும் !
மறைகழண்ட பக்கதானில் இருந்தால் மறை கழண்டு தான் போகும்.
சர்வதிகாரிப்போல் பேசுவது எவ்வகையல் நியாயம் ?கூட்டனிக்கட்சில் இருந்தால் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் ‘கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ‘ இவர்கள்தான் சமய சந்தர்ப்பவாதிகள் !!!
பெரியோரை இகழ்வது வீரமன்று.வாழ்க நாராயண நாமம்.
பக்காத்தான் கூட்டத்துக்கு வராததற்கான காரணத்தை கூறாமல் இருப்பதும் கூற மறுப்பதும், கூறத் தயங்குவதும் தான் மடத்தனம்…மாண்புமிகு ஆன்மிகத் தலைவர் அவர்களே. பாஸ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலின் போது தன் சுய ரூபத்தைக் காட்டத் தயங்காது என்பது அண்மைய அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. சிலாங்கூரை கவிழ்க்க முன்னால் ம. புசாரிடம் செய்த ஒப்பந்தம் பலனற்றுப் போனதைத் தொடர்ந்து இன்னொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு ‘அவர்கள்’ தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் பாஸ் கட்சியின் அண்மைய நடவடிக்கைகள் நமக்குப் புரிய வைக்கின்றன. அப்படி ஒரு சூழ்நிலை வந்து பாஸ் பக்காத்தனில் இருந்து வெளியேறும் நிலை வரலாம். அதற்கான முன்னேற்பாடுகளை அன்வாரும் லிம் குவான் அங்கும் இப்போதே கலந்தாலோசிக்க வேண்டும். பாஸ் இல்லாமல் அடுத்த பொதுத் தேர்தலை பக்காத்தான் சந்திக்க நேருமானால், அதனால் ஏற்படும் ‘ஓட்டு’ இழப்புக்களை எப்படி சரி செய்யலாம்…வேறு எந்தக் கட்சியை இணைக்கலாம் என்பதை இப்போதே கூர்ந்து ஆராய வேண்டும். தேர்தல் வந்தபின் யோசிப்போம் என்பது புத்ரா ஜெயாவை நோக்கிய உங்கள் பயணத்தைத் தடைப்படுத்தும்..உஷார்..!
உடல் நலம் சரியில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து வீட்டில் இருங்க………………………