முந்தைய மந்திரி புசாரின் உதவியாளர்களுக்கு ரிம2.5 கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து எந்தவொரு முடிவும் எடுக்குமுன்னர் இவ்வாரம் நடைபெறும் மந்திரி புசார் இன்கோர்பரேடட்(எம்பிஐ) வாரியக் கூட்டத்தில் அது பற்றி விவாதிக்கப்படும்.
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி இவ்வாறு தெரிவித்ததாக சிலாங்கூர்கினி நேற்று கூறியது. அதன்மீது கணக்குத் தணிக்கை அறிக்கை வெளியிடுவது பற்றி மாநில ஆட்சிக்குழு விவாதித்ததாகவும் அது கூறிற்று.
“அது பற்றி நவம்பர் 12-இல் எக்ஸ்கோ கூட்டத்தில் பேசப்பட்டது. இனி, அவ்விவகாரம் எம்பிஐ-க்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு முடிவெடுக்கப்படும்”, என மந்திரி கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டது.
விவாதிக்கப்படும் நன்றாக கவனியுங்கள், விவாதிக்கப்படும் ஆனால் முடிவு எடுக்கபடாது.