டிபிபிஏ மீதான விலைப் பயன் பகுப்பாய்வை இப்போதே வெளியிட வேண்டும்

tppaபிகேஆர்  கிளானா  ஜெயா  எம்பி  வொங்  சென்,  ட்ரேன்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் (டிபிபிஏ) மீதான விலைப் பயன் பகுப்பாய்வு  அறிக்கைகளைப்  பேச்சுகள்  முடிந்தபின்னர்  வெளியிடும்  அரசாங்கத்தின்  முடிவைக் கேட்டுக்  குழம்பிப்  போயுள்ளார்.

பேச்சுகளின்  முடிவில்தான்  அவ்வறிக்கை  வெளியிடப்படும்  என  அனைத்துலக  வணிக, தொழில்  அமைச்சர்  முஸ்தபா  முகம்மட்  மக்களைவையில்  கூறினார்.

“அறிவுப்பூர்வமாக  பார்த்தால்  அவ்வறிக்கைகள் இப்போது  வெளியிடப்படுவதே  பொருத்தமாக  இருக்கும். அதுதான்  பேச்சுகளின் இறுதிக் கட்டங்களில்  நமக்கு வழிகாட்டி  உதவும்”, என  வொங்  செய்தியாளர்  கூட்டத்தில்  கூறினார்.

“எனவே, பேச்சுகள்  முடியுமுன்னரே  அறிக்கைகள்  எம்பிகளுக்குக்  கிடைக்க  வேண்டும்”, என்றாரவர்.