1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் வெளியிட்டு வந்துள்ள நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி, அதற்குத் தேவையான ஆவணங்களை நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
1எம்டிபி ரிம9.6பில்லியன் கடனுக்குப் பொறுப்பேற்று அரசாங்கம் ஆதரவுக் கடிதம் வழங்கியதே இல்லை என்று அஹ்மட் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஆனால், இன்று ரபிஸி ஓர் அறிக்கையில், அஹ்மட் அக்கடிதம் இருப்பதை அறிந்தே இருந்தார் எனக் கூறினார். அதற்கு, முன்பு அவர் ஊடகங்களிடம் கூறியவையே சான்றாகும் என்றார்.
அவையில் தவறான தகவல்கள் தெரிவித்தமைக்காக அஹ்மட்டை உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக அவைத் தலைவரிடம் ஆவணங்களை ஒப்படைத்திருப்பதாக ரபிஸி கூறினார்.
“எனது தீர்மானம்மீது அவைத் தலைவர் என்ன முடிவெடுத்தாலும் நானும் என் பக்கத்தான் ரக்யாட் சகாக்களும் 1எம்டிபி கடன் பிரச்னையை அம்பலப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்வோம்”, என்றாரவர்.
அஹ்வ், தூக்கம் வருது.
தூங்கிவிடாதே தம்பி ! நாளைய தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்றால் தூங்கி விடாதே ! 1mdb செய்த முதலீடை tony pua புட்டு புட்டு வைக்கிறார் , முழுமையாக காணொளி கேட்ட எனக்கு நடுக்கம் வந்தது !