நிலச் சரிவுகளுக்கு அன்னிய தொழிலாளர்களே காரணம் என்று கூறுவதை நிறுத்துங்கள்

aegileகேமரன்  மலையில்  வெள்ளங்களும்  நிலச் சரிவுகளும்  ஏற்பட  அன்னிய  தொழிலாளர்கள்தாம் காரணம்  என்று  சொல்லிக்  கொண்டிருப்பதைத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  நிறுத்த  வேண்டும்  எனத்  தொழிலாளர் உரிமைக்காக  போராடும்  என்ஜிஓவான  தெனாகானிதாவும்  மலேசிய  சோசலிசக்  கட்சியும்  கோரிக்கை  விடுத்துள்ளன.

அன்னிய தொழிலாளர்கள்மீதுள்ள வெறுப்பின்  காரணமாகத்தான்  அவர்  அவ்வாறு  கூறுகிறார்  என  அவை  குறிப்பிட்டன.

“நிலத்தை  ‘ஆக்கிமித்துக்கொள்ளும்’அன்னிய  தொழிலாளர்களால்தான்  கேமரன் மலையில்  வெள்ளப் பெருக்கும்  நிலச் சரிவுகளும்  ஏற்படுவதாகச்  சாடி  முகைதின்  நவம்பர் 9-இல்  வெளியிட்ட  அறிக்கை  தவறான எண்ணத்தைக்  கொண்டது, அன்னிய தொழிலாளர்மீது  வெறுப்பைக் காட்டுகிறது  பிரச்னைக்கான  அடிப்படைக்  காரணத்தையும்  கவனிக்கத்  தவறுகிறது”  என  தெனாகானிதா  இயக்குனர்  ஆகில்  பெர்னாண்டஸ்  கூறினார்.

அன்னிய தொழிலாளர்கள்மீது  பழி  போடுவதன்வழி  முகைதினும்  அரசாங்கமும்  உண்மையான  காரணத்தைவிட்டு விலகிச்  செல்கிறார்கள்.  அங்கே  பத்தாண்டுகளுக்கு  மேலாகக்  காடுகள்  அழிக்கப்பட்டு வருவதுதான் வெள்ளப் பெருக்கும்  நிலச் சரிவுகளும்  ஏற்படக்  காரணமாகும்  என்றாரவர்.