இந்தியா, புதுடில்லியில் உலக ஹிந்து மாநாடு

 

World Hindu Congress Large Bannerஉலகின் மூத்த சமயத்தினர் ஹிந்துக்கள். பெரும்பாலான ஹிந்துக்கள் பாரத தேசத்தில் இருப்பினும் உலகெங்கும் ஹிந்துக்கள் வாழ்கின்றனர். அந்நிலையில், உலக ஹிந்து பேரவை ஓர் அதிகாரப்பூர்வ இயக்கமாக இல்லாமல், உலக ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாக இயங்கி வருகின்றது. ஆகவே, உலகை ஹிந்துக்களின் ஒருமித்த சிந்தனை மற்றும் செயல்பாட்டினை வளப்படுத்தவே எதிர்வரும் 21-ஆம் நாள் நவம்பர் மாதம் உலக ஹிந்து மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாடு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடைபெற உள்ளது. உலக ஹிந்துக்களை டில்லி அசோக விடுதில் இம்மூன்று தினங்களில் ஒன்றாகக் காணலாம். உலகலாவிய நிலையில் ஹிந்துக்கள் பல்வேறு கலாச்சாரங்கள், சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் வேறுபட்டுள்ளனர். இவ்வேற்றுமைக்கு மத்தியில், கருவில் நாம் ஹிந்துக்கள் எனும் ஒற்றுமை உள்ளது. ஹிந்து எனும் அடிப்படையில் நாம் ஒன்றினைந்து செயல்பட்டால் நம்மின் பலத்தை நாம் பன்மடங்காக்கலாம் எனும் நோக்கிலே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் ஏழு தலைப்புகள் மீது கருத்துப் பறிமாற்றம் நடைபெறும். உலக ஹிந்துக்களின் பொருளாதார மேம்பாடு, கல்வித்துறை மேம்பாடு, இளைஞர்களிடையே புத்தாக்கச் சிந்தனை, பெண்களின் வளர்ச்சி, அரசியல் சிந்தனை, தொழிழ்நுட்பம் மற்றும் தொடர்பூடக பங்கேற்வு, ஆகியவற்றுடன் ஹிந்து ஆலயங்கள் மற்றும் இயக்கங்களின் ஒருமித்த மேம்பாடுகள் குறித்து இம்மாநாட்டில் கருத்துப்பறிமாற்றங்களும் கலந்துரையாடல்களும் அமையும். இம்மாநாட்டின் வழி புதிய கோணங்களிலான தீர்மானங்கள் வரைபடங்களாக்கப்பட்டு வருங்கால ஹிந்துக்களின் நலனுக்காக அமலாக்கப்படும்.

“உலக ஹிந்து பொருளாதார மாநாடு, உலக ஹிந்து இளைஞர் மாநாடு, உலக ஹிந்து அரசியல் மாநாடு, உலக ஹிந்து இயக்க மாநாடு, உலக ஹிந்து தொடர்பூடக மாநாடு, உலக ஹிந்து பெண்கள் மாநாடு, மற்றும் உலக ஹிந்து கல்வி மாநாடு என ஏழு உட்பிரிவுகளாக இந்த உலக ஹிந்து மாநாட்டின் அங்கங்கள் இடம்பெற உள்ளன. இம்மாநாட்டில் பல தரப்பட்ட கோணங்களில் கருத்துகளும் ஆலோசணைகளும் பேசப்படவுள்ளன ” என்று உலக ஹிந்து பேரவை, மலேசியாவின் தலைவர் வே. க. ரகு கூறினார். இவருடன் மேலும் 100 சமய ஆர்வலர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  இம்மாநாட்டில் பங்கேற்பதன் வழி உலக ஹிந்துக்களிடையே நட்புறவும் தொடர்பும் வளப்படும் என அவர் மேலும் விவரித்தார். இதனால், உலக ஹிந்துக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க இயலும் என்றும் அவர் கூறினார்.

இம்மாநாட்டில், உலகளவில் உள்ள வர்த்தக நிபுணர்கள், அரசியல் நிபுணர்கள், கல்விமான்கள், பெண் சாதனையாளர்கள், சமய மகான்கள் ஆகியோர் பங்கு பெற்று கருத்துரைக்கவுள்ளனர்.  தரமான ஹிந்துக்களின் வளத்திற்கு இம்மாநாடு பெரும் பங்காற்றவுள்ளது. மேலும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர் www.worldhinducongress.org எனும் அகப்பக்கத்தில் தகவல்கள் பெற்று மின்னியல் பதிவுகள் செய்யலாம்.

தொடர்புக்கு,

+911145564441 (Mr. Sanjay)

707, Pearls Omaxe Tower-1,

Nethaji Subhash Place,

Pitampura, Dehli-110034

[email protected]

[email protected]

www.worldhinducongress.org