அடுத்த வார அம்னோ பேரவையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ரோன்95 மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும். தவறினால் டிசம்பர் 31-இல் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு எச்சரித்த பாண்டான் எம்பியும் பிகேஆர் தலைமைச் செயலாளருமான ரபிஸி ரம்லி, அம்னோ தலைவர் அவ்வாறு அறிவிப்பது பொதுமக்களிடையிலும் கட்சியிலும் சரிந்துவரும் செல்வாக்கை நிமிர்த்தி வைக்க உதவும் என்றார்.
டிசம்பர் 31 ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைவதை உறுதிப்படுத்த தம் கட்சி விளக்கக் கூட்டங்கள் வழியாகவும் சமூக வலைத்தளங்களிலும் ஆதரவுதேடும் இயக்கமொன்றை மேற்கொண்டிருப்பதாகவும் ரபிஸி தெரிவித்தார்.
ரோன்97-இன் விலையைக் குறைத்ததுபோல் ரோன்95-இன் விலையும் குறைக்கப்பட வேண்டும் என்றாரவர்.
ரோன்95-இன் மட்டும் குறைந்தால் போதுமாடா ,டீசலை யாரு குறிப்பா > உங்க அப்பனா வந்து குறைப்பான்
நல்லது உம்னோ அதை செய்யுமா ?
ரோன் 95 விலை குறைந்தது ( சே என்ன இது கெட்ட கனவு)
உலகளவில் எரிபொருள் விலை அடிமட்டத்துக்கு சரிந்துள்ளது. ஆனால் இவர்கள் ரோன் 97-க்கு மட்டும் (அதுவும் செம காலம் கடந்து) விலை குறைப்பைச் செய்துள்ளார்கள். காரணம் அது பணக்காரர்களின் உயர்தர கார்களுக்கு ஏற்ற பெட்ரோல். அது பெருமளவில் வாங்கப்படுவதில்லை. அப்படியானால் ஏழைகளும் குறைந்த வருமானம் பெறுவோரும் வாங்கும் பெட்ரோலான ரோன்95 விலை குறைக்கபடாததன் காரணம் விளங்குகிறதா மக்களே… இந்த விலை குறைப்பு ஏழைகளையும் குறைந்த வருமானம் பெறுவோரையும் சென்றடையக் கூடாது என்ற ‘நல்ல’ எண்ணம் தான். ஆனால் அதுக்கும் ஆப்பு வைத்து விட்டான் பக்காத்தான் ராபிட்சி. வேறு வழியில்லாமல் டிசம்பருக்குள் விலையைக் குறைத்தே ஆகவேண்டிய கட்டாயம். இதை அரசாங்கம் முன்கூட்டியே செய்திருக்கலாம். கொஞ்சம் ‘நல்ல’ பெயராவது மிஞ்சியிருக்கும். இப்ப பாருங்க பாரிசானுக்கு திரி சங்கட சூழ்நிலை. இங்கே பாரிசானுக்கு கருத்துச் சொல்லும் __குனிகள் தயவு செய்து உங்க தலைவர்களுக்கு எடுத்துச் செப்பலாமே.
ஏன் அதை அந்த கூட்டத்தில்தான் சொல்லனுமா . போங்கடா ……