பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு இந்து குருக்கள்போல் காட்சியளிக்கும் படத்தைப் பதிவிட்டவர்களை முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் கண்டித்தார்.
அச்செயல், “சமுதாயத்தின் சிந்தனை நோயுற்றிருப்பதைப் பிரதிபலிக்கிறது” என்றார்.
இதற்கெதிராக பள்ளிகளிலும் இதர கல்விக் கழகங்களிலும் அறநெறிகள் கற்றுத்தரப்பட வேண்டும் என முன்னாள் தகவல், தொடர்பு அமைச்சருமான அவர் கூறினார்.
அறநெறிச் சார்ந்த செயல்களையே எல்லாச் சமயங்களும் வலியுறுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரயிஸ், இப்போது யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ) தலைவராகவும் சமூக-கலாச்சார விவகாரங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசகராகவும் உள்ளார்
வேகமான் பதவிதான் நீங்களாவது இந்த மலேசியர்களை சீர்ப்படுத்துங்கள் !
இந்த படத்தை வெளிவிடவனை செருப்பால் அடிக்கணும்.
அரசில்ல இதெல்லாம் சாதரணம். ..எப்படி alert டா மக்கள் இருபது நல்லது ..மனிதன் 2000 ஆண்டுக்கு முன் எப்படி வாழ்ந்தான் என்பது முக்கியம்.. 2000000 முன்பு வாழ்ந்த சரித்திம் அறிவை முதன்மை கொண்டது …மதம் புத்தியை மயக்கும் , 3ரம் உலகதுக்கு தேவையான சாதரண மக்களை கட்டுபோடும் . சாப்ட்வேர்.. போதும் உங்கள் கூத்து.