எரிபொருள் உதவித் தொகை இரத்துச் செய்யப்பட்டதைச் சாடுகிறது பிகேஆர்

nikபொருள், சேவை  வரி  அமலுக்கு  வரும்  வேளையில்  எரிபொருள்  உதவித்  தொகை  கொடுப்பதை  நிறுத்திக்கொள்வது  பொறுப்பற்ற  செயலாகும்  என  பிகேஆர்  இளைஞர்  பகுதி  அரசாங்கத்தைச்  சாடியுள்ளது.

உதவித் தொகை  இரத்துச் செய்யப்படுவதாக  அறிவித்த  அரசாங்கம்  எதற்குத்தான்  முன்னுரிமை  கொடுக்கிறது  என்று  மக்கள்  கேள்வி  கேட்க  வேண்டும்  என அதன்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்  கூறினார்.

“பெரிய  செலவினங்களைக்  கொண்ட (1மலேசியா  மேம்பாட்டு நிறுவனக்  கடன் போன்றவை) திட்டங்கள் பற்றிச்  சரியான  விளக்கமளிப்பு  இல்லாததும்  மக்கள்  தொடர்ந்து  சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவதும்  பொதுமக்களின்  பாதுகாக்கும்  அரசாங்கத்தின்  முன்னுரிமைகளும்  கடப்பாடுகளும்  பலவீனமானவை  என்பதைத்தான்  காண்பிக்கின்றன”, என்றாரவர்.

சிலாங்கூர்  ஆட்சிக்குழு  உறுப்பினருமான  நிக்  நஸ்மி,  புதிய  எரிபொருள்  விலைகள்  எப்படி  நிர்ணயிக்கப்படும்  என்பதையும்  1974-இலிருந்து  பெட்ரோனாஸ்  கொடுத்துவரும்  பணம்  எப்படி  செலவிடப்படுகிறது  என்பதையும்  அரசாங்கம் விவரிக்க  வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டார்.

“சில  ஆண்டுகளாகவே  உதவித்  தொகை  சீரமைப்பு  நடந்து  வருகிறது  ஆனால்,  அரசாங்கச்  செலவினம்  மட்டும்  குறைவதில்லை  என்பதை  பிகேஆர்  கவனித்துக்  கொண்டுதான்  இருக்கிறது”,  என்றவர்  சொன்னார்.