சுயேட்சை செய்திதளமான மலேசியாகினிக்கு எதிராகக் கடந்த 15 ஆண்டுகளாக மேகொள்ளப்பட்ட தாக்குதல்கள் அதன் மனஉறுதியைத் தகர்ப்பதில் தோல்வி கண்டன என்று அத்தளத்தின் கூட்டு நிறுவனரான ஸ்டீபன் கான் இன்று கூறினார்.
மலேசியாகினியின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதன் 1,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடம் உரையாற்றிய ஸ்டீபன் கான் மலேசியாவின் முதன் செய்தி இணையதளம் “அதிகாரத்தினரிடம் உண்மையைக் கூறும்” அதன் பணி தொடரும் என்று கூறினார்.
“இப்போதும் இல்லை, எப்போதுமே நாங்கள் போய் விட திட்டமிடவில்லை. உங்களுடைய ஆதரவுடன் நீண்ட காலத்திற்கு இங்கேயே இருக்கும் நோக்கம் கொண்டுள்ளோம். இங்கேயேயிருந்து, உங்களால் தேர்ந்தெடுத்தக்கப்பட்டவர்கள் உங்களுக்குப் பதில் கூறும் பொறுப்புடையவர்களாக ஆக்கும் எங்களது பணியைத் தொடர்வோம்”, என்றாரவர்.
“இது நமக்கு பழமையை நினைவுக்குக் கொண்டுவருகிறது, இல்லையா? என்று புன்னகையுடன் மலேசியாகினியின் முதன்மை ஆசிரியரான கான் கூறினார்.
“இந்த 56கே மோடத்துடன்தான் மலேசியாகினி உலகின் இதர பாகங்களைச் சென்றடைந்தது. இன்று, இந்த சாதாரன மோடத்தை விட 400 மடங்கு வேகமாகப் போகிற தரவு வேகம் நம்மிடம் இருக்கிறது.
“உண்மையில், அன்றைய உலகம் வேறுவிதமானது. (அப்போது) மகாதிர் முகமட் அதிகாரத்தில் இருந்தார். குடிமக்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) பற்றிய பயத்தில் உறைந்துபோயிருந்தனர்.
“அரசியல் சந்தடியற்ற குரலில் பேசப்பட்டது. இரகசியப் போலீசார் எல்லா இடத்திலும் இருந்தனர்.
“அப்போது இணையதளம், முகநூல் டிவிட்டர் போன்ற எதுவும் இல்லை. நம்மிடம் இருந்ததெல்லாம் ஒரு செங்கல் அளவிலான கைத்தொலைபேசி – மற்றும் மலேசியாகினி.”
மாயவித்தை தாக்குதல்
மலேசியாகினி கடந்த 15 ஆண்டுகளில், இரண்டு குதப்புணர்ச்சி வழக்குகள், மூன்று பிரதமர்கள், நான்கு பொதுத்தேர்தல்கள், எண்ணற்ற இடைத்தேர்தல்கள் பற்றிய செய்திகளைச் சேகரித்துள்ளது. அதன் இரு செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.
“எங்களைத் துரோகிகள் என்று ஒரு பிரதமர், மகாதிர், அறிவித்தார். இன்னொரு பிரதமர் (தற்போதைய பிரதமர்) நஜிப் வழக்கு தொடுத்துள்ளார்.
“எங்களைப் பலவீனமாக்கிய சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளோம், அடிக்கடி செய்தியாளர் கூட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டோம், ஒரு முறை போலீசார் அதிரடித் தாக்குதல் நடத்தி எங்களுடைய 19 கணினிகளைப் கைப்பற்றினர்.
“இது போன்ற அனைத்து தாக்குதல்களும் எங்களுடைய மனஉறுதியைத் தகர்த்தத் தவறியதால், சிவப்பு வர்ண சாயத்தை தெளித்தனர். எங்களுடைய அலுவலகக் கதவுப்படிகளில் கிட்டத்தட்ட இறந்தபோன ஒரு வாத்தை விட்டுச் சென்றனர்.
“ஆனால், அந்த வாத்து, மலேசியாகினியை போல், இன்னும் உயிருடனும் நலமாகவும் இருக்கிறது”, என்று கான் நகைச்சுவையோடு கூறினார்.
அந்நிகழ்ச்சியில், மலேசியாகினியின் 70 பேர் அடங்கிய பணிக்குழுவினர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
சந்தா செலுத்தி கருத்து தெரிவிக்கும் மலேசியாகினின் பல்லாயிரக்கணக்கான வாசககளுக்கு கான் வாழ்த்து தெரிவித்தார். அனைவரின் பெயர்களையும் அறிவிப்பது இயலாத காரியம் என்பதால், சிலரின் பெயர்களை கான் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள மலேசியாகினியின் புதிய அலுவலகம் @Kini திறப்பு விழா கண்டது.
மலேசியாகினியின் சாதனை பல்லாண்டு தொடர எமது வாழ்த்துக்கள்.
டப்பனா செய்திகளை திரிச்சி வெளியிடுவதி நிறுத்திகொள்ளுங்கள் ,1 மலேசியா என்று மனதில் நினைத்து கொண்டு இந்த மலேசிய கினியை உண்மை நிலவரத்தை ,உத்துசான் மலேசிய வுடன் இணைந்து சேவல் படுங்கள் உங்களுக்கு நல்லது .மலேசிய கினி தொடர வாழ்த்துகிறேன் .
மலேசிய கினி யில் எதுவும் முக்கியமான செய்தியாக தெரிய வில்லை !எனக்கு தெரிந்து இது தேவை இல்லை என்று நினைக்கிறேன் ! PKR ஆருக்கு துணை போற மாதிரி இருக்கு .இதில் செய்திகள் அப்படி ஒன்றும் பெரிதாக சொல்ல முடியாது .PKR றுக்கு சார்பாக செய்திகளை வெளியிடுகிறார்கள் ,BN நை பற்றி எதுவும் சொல்லவில்லை ,ஆனால் மறை முகமாக தாக்குகிறார்கள் .இதை தவிர்க்கவும் உங்களுக்கு நல்லது
ஊக்கமது கைவிடேல்
MK நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை…இதை நான் லைக் பண்றேன்..சில நேரங்களில் அரசாங்கத்தின் பயனுள்ள சில திட்டங்கள் கூட மக்களுக்கு தவறான கண்ணோட்டமாக தெரிகிறது.
முக்கியமான செய்தி இல்லாத மலேசியகினியின் செம்பருத்திக்குள் நுழைந்து முக்கி, முக்கி எழுதுவானேன்?. பயனைக் காணதவர் என்போர் செம்பருத்தியில் இருந்து வெளியேற பயணத்தைக் கட்டுங்கள்.
மலேசிய மக்களின் வெறும் கோப்பிதியாம் பேச்சுக்கு செயல்வடிவம் கொடுப்பது மலேசியாகினி. அத்துமீறிய அதிகார மமதைக் கொண்ட நம்ப அரசையும் அதன் அமைச்சர்களையும் சற்று, மிக2 சிறிதளவாவது, கடிவாளமிட மிக2க் கடின கடற்பாடுடனும் சவால்களுடனும், முயற்சி செய்யும் மலேசியாகினிக்கு நமது நன்றிகள். அதன் நிருபர்கள் கைதாகின்றனர். நிர்வாகம் வழக்கு மன்றத்திற்கு இழுக்கப்படுகின்றது – பொதுமக்களின் உரிமைக்குப் போராடுவதால். நமக்காகப் போராடுபவர்களுக்கு நாம் சிறிதளவாவது தோள் கொடுப்பது நமது நன்றிக் கடன். இல்லையென்றால் போராட்டவாதிகள், நம்மைபோல், அவர்கள்2 வேலையை கவனிக்க சென்றுவிடுவார்கள். கடைவிரித்தோம் கொன்றாரிலர் எனும் நிலை ஏற்படின் நல் மாற்றம் விரும்பும் மக்களுக்கே பாதிப்பு.
தேனீ கொஞ்சம் ரிலேக் பண்ணுங்கோ..சில நேரங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும்..நம்மவர்கள் எதிர்கட்சியின் பிடியில் சிக்கி சீரழியாமல் இருக்கத்தான் எங்களை போன்றோர் இங்கு எழுதிகொண்டிருக்கிறோம்.
shanti.. ஆளும் கட்சியில் 57 வருஷமா சீரழிஞ்சது ஞாபகம் இருக்கா? உண்மை என்னனு இந்தியர்களுக்கு நல்ல தெரியும் . நீங்க யாருன்னு எல்லாருக்கும் தெரியும்.. மலேசிய கினி உண்மையா தான் எழுதுது, ஏன் ரொம்ப கசுக்குதா?
சாந்தி, எதிர்கட்சி இல்லையென்றால் நாம் எடுப்பார் கைப்பிள்ளையாகத்தான் இருப்போம்.கூஜாதூக்கும் ம இ கா வை நம்பி மோசம் போனது மறந்தாபோச்சு. அடிபட்டும் திருந்தவில்லையென்றால் ஆண்டவன்தான் உம்மை காப்பாற்ற வேண்டும். பல இன்னல்களுக்கிடையே இன்நாள்வரை உண்மைக்காக போராடி வரும் மலேசியாகினிக்கு எனது வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு. வளர்க உங்கள் சேவை.
sivaje தம்பி “நீங்க யாருன்னு எல்லாருக்கும் தெரியும்” என்று எழுதி இருக்கேரீர்கள் ,இதற்க்கு அர்த்தம் மிரட்டுவது போல் இருக்கிறது !அப்படி தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள் ?
சாந்தி mk இந்த இருவரையும் காசு கொடுத்து பேச சொல்வது உங்களுக்கு தெரியுமோ நம்ம பிரதமன் ஒரு சிலரை காசு கொடுத்து மாற்று கருத்து எழுத சொல்வதற்க்கா நியபிட்டிருப்பதாக புத்ரஜெயா வட்டாரம் கூறுவதை ஆராய்ந்தேன் அது உண்மைதான் என்று உம்னோ இலன்ஜர் பகுதி உறுதிபடுத்தியது.
எங்க பிற இனத்தவர்களின் கலாச்சார நடனம் சீனர்களின் கலாச்சார நடனம் மற்றும் தானா??????????????
MK -malaysiakini PKR சார்ந்தது அல்ல. 57 ஆண்டுகளில் நம்மை எல்லாம் ஓரங் கட்டி நம்மை இழி நிலைக்கு கொண்டு வந்தது கண்ணுக்குத்த்ரிய வில்லையா? எனக்கு BN -PKR என்று கணக்கில்லை — யார் ஒழுங்காக பாராபட்சமின்றி ஆட்சி புரிகின்றனரோ அவரே என் வாக்குக்கு தகுதி ஆனவர்.
சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்லித்தான் ஆகவேண்டும். இன்று பி.என். அரசாங்கத்தால் பல தவறுகள் தெரிந்தே மறைக்கப்படுகின்றன. சான்றுக்கு கேமரன்மலை மண்சரிவு. அதுபற்றி நமது பி.என். அரசியல்வாதிகளுக்கு ஒன்றுமே தெரியாதா? எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவையும் கொள்ளையடித்துவிட்டு இப்போது பழனிவேலுவைக் குற்றம் சொல்லுகின்றனர். நிலைமை கட்டுமீறும் போது அது கடவுளின் செயல் என்பார்கள். பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டனர். அவர்களால் ம.இ.கா காரனை வைத்துத் தான் பத்திரிகை நடத்த முடியும். இப்போது மலேசியகினியைத் தவிர நமக்கு வேறு போக்கிடம் இல்லை!
MKஅண்ணா நான் எதற்கு மிரட்ட வேணும் ? அரண்டவன் கண்ணனுக்கு பார்பெதேல்லாம் பேய்னு சொல்லுவாங்கா. இது உங்க பாரிசானுக்கு
பாரிசானுக்கு ஏராளமான மீடியாக்கள் துணை போகின்றன.அதனால் லாபமும் அடைகின்றன.எதிர் கட்சிக்கு மலேசியகீனி ஒன்றுதான்.இதுவும் இல்லை என்றால் அம்னோகாரன் தலை கால் தெரியாமல் ஆடுவான்.இந்த விஷயத்தில் மலேசியாகினி நடுநிலை வகிக்க வேண்டிய அவசியமில்லை.ஆளும் கட்சிக்கு சொந்தமான தகவல் சாதனங்கள் [வானொலி,தொலைகாட்சிகள்]உட்பட எந்த நிறுவனங்கள் நடு நிலையாக செய்திகளை வெளியிடுகின்றன?
மலேசியாகினி தனது 15-ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான வேலையில் ஒரு சின்ன வேண்டுகோள்,அதாவது “கினி டிவி” தற்பொழுது மலாய்,.ஆங்கிலம்,சீனம் ஆகிய மூன்று மொழிகளில் பீடு நடை போடுகிறது.அது போல் நமது செம்மொழியாம் தமிழ் மொழியிலேயும் “கினி டிவி” வளம் வர பலரும் ஆவல் கொண்டுள்ளனர்.அதற்கு செம்பருத்தியின் பொறுப்பாளர்கள் ஆவன செய்யும்படி இதன்வழி அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.நன்றி.
மு.ப.கரிகாலன் எதாவது நடக்கிற கதையா இருந்தால் சொல்லுங்கள்.