புதிதாக நியமிக்கப்பட்ட கிள்ளான் துறைமுக நிறுவன(பிகேஏ)த் தலைவர் கொங் சோ ஹா, பிகேஎப்ஜெட் மீதான ரிம720மில்லியன் வழக்கைக் கைவிட்டது ஏன் என விளக்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கோலா டிமென்சி (கேடிஎஸ்பி) மீதான அவ்வழக்கைக் கைவிடும் முடிவு “அதிர்ச்சியளிப்பதாக” டிஏபி செர்டாங் எம்பி ஒங் கியான் மிங்(வலம்) கூறினார்.
வழக்கைக் கைவிடுவதென பிகேஏ வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவு செய்ததாக தி எட்ஜ் நிதியியல் நாளேடு இன்று கூறியிருந்தது.
அது பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் பிகேஏ தலைவர் அது பற்றி விளக்கக் கடமைப்பட்டுள்ளார் என ஒங் கூறினார்.
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் யானைகளும், கழுதைகளும்தான் பதில் சொல்ல வேண்டும்.