மலேசியாவிலிருந்து சாபா, சரவாக் ஆகிய இரண்டும் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருகிவருவதாகக் கூறப்படுவது “வெறும் தோற்றப்பாடுதான்” என்கிறார் உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார்.
“சிலர் அப்படிச் சொல்லி வருகிறார்கள். அவர்கள் எண்ணிக்கை அதிகமில்லை. அது (பெரும்பாலோர் என்பது) உண்மையும் அல்ல”, என நாடாளுமன்றத்தில் சொங் சியாங்கின் ஜென்(டிஏபி-பண்டார் கூச்சிங்)-னின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் கூறினார்.
“அது(பெரும்பாலோர் என்பது) உங்களின் தோற்றப்பாடு. நீங்கள் உங்களின் சொந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் யதார்த்த உலகில் வாழ்கிறோம்”, என வான் ஜுனாய்டி கூறினார்.
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம். அப்படி இருக்கு இந்த அமைச்சரின் கூற்று. இப்படியே யதார்த்த உலகில் நம்பிக்கிட்டு இருங்க. அப்புறம் கோவிந்தா!, கோவிந்தா! தான்.
பாருடா என்ன நடக்க போகிறது .