சிலாங்கூர் சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பாஸ் கட்சியின் பாங்கி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகம்மட் ஷாபி இங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஷாபி, 28 வாக்குகள் பெற்று அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மன்றத் தலைவர் ஹன்னா இயோ அறிவித்தார். சட்டமன்றத் துணைத் தலைவருக்கான தேர்தலில் பிஎன் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லின் -னும் அப்பதவிக்குப் போட்டியிட்டார். அவருக்கு 14 வாக்குகள்தான் கிடைத்தன.
இதுதான் சொந்த காசிலே சூனியம் வச்சுகிறது என்பது. எதையும் முன் பின் யோசிக்காமல் பாஸ் கட்சிக்கு அந்த பதவியைக் கொடுத்து அவன் 2-வது முறையாக PKR – ரை வீழ்த்த முயற்சி செய்யப் போகின்றான்.
இது எதிர்பார்த்ததுதான், PAS உம் PKR உம் ஒன்னயிட்டங்க, DAP க்கு பட்டை நாமம் & வாய்யில்லெ அல்வா.
KUMKI அவர்களே பகர் தேர்தலில் நாகாலி மேசை இல்லாம் பறந்தது கேள்வி பட்டு இருப்பீர்கள் ,இதுதான் அந்த கட்சியின் தரம் ,,PKR ராய் நம்பி மோசம் போக வேண்டாம் நண்பரே .இருந்தாலும் அன்வார் மீது எனக்கு மரியாதை இருக்கிறது நம்பிக்கை இல்லை .
அடுத்த பொது தேர்தலில் சிலாங்கூர் மாநிலம் ” கோவிந்தா கோவிந்தா “BN சிறப்பாக ஆட்சி செய்ய போகுது பாருங்கள்
நண்பரே, PKR மட்டுமில்லை PAS மற்றும் DAP கட்சிகளை நம்பினவருக்கு காத்திருக்கு பின்னாலே பெரிய ஆப்பு.