டிஏபி எம்பிகள் இருவர், மலேசியாவில் உள்ள அகதிகளின் நிலையை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கும் அல்-ஜசீராவின் ஆவணப் படம் பற்றி விவாதிக்க அனுமதி கோரும் அவசரத் தீர்மானம் ஒன்றை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
நான்கு நாள்களுக்குமுன் ‘மலேசியாவின் வேண்டப்படாதவர்கள்’ என்ற தலைப்பில் ஒளியேறிய அவ்வாணவப் படம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எதிர்வினை ஆற்றவில்லை என்று கூறிய செகாம்புட் எம்பி லிம் லிப் எங்-கும் செர்டாங் எம்பி ஒங் கியான் மிங்கும் அத்தீர்மானத்தை அனுமதிக்க வேண்டுமென அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா-வைக் கேட்டுக்கொண்டனர்.
அத்தீர்மானம் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.
ஆவணப்பட விவகாரத்தைச் சரியாகக் கையாளாவிட்டால் ஆசியான் நாடுகளுக்குத் தலைமையேற்கும் மலேசியாவின் ஆற்றல் பாதிக்கப்புறலாம் என்று அத்தீர்மானம் கூறியது.
அகதிகள் தானே என்று அவர்கள் அலட்சியம் காட்டத்தான் செய்வார்கள். இதுவரையில் அவர்கள் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். புதிதாக என்னத்தை சொல்லப்போகிறார்கள்!
அகதிகளில் முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதவர் என்ற பாகுபாடுதான் இதற்கு காரணம்.உள்நாட்டு மலேசியர்களிடம் இனவாதத்தை கட்டவிழ்த்து விடுவதுபோல் அகதிகளிடமும் இனவாதத்தை காட்டியதன் விளைவு அது.
Plz Any Body Help to the refugees to resettle to 3rd country,
யாரு இது புதுசா வெள்ளைக்கார துரை?
மலாய்காரர்கள் அல்லாத சொந்த நாட்டுக்காரர்களை வழி நடத்தும் அழகைத்தான் பார்கிறோமே . இந்த லட்சணத்தில் அகதிகளை ஒழுங்கா கவனிக்க போறானுங்க
யாரு இது வெள்ளைக்கார துரை
தயவு செய்து இங்கே இருக்கின்ற இலங்கை அகதிகள் தொடர்பாக ஒரு முடிவு எடுத்து அவர்கள் இன்னும் ஒரு நாட்டில் நிம்மதியாக வாழ மலேசியா அரசாங்கத்துடன் யாராவது பேசுங்கள்.
அகதிகளுக்கான ஆணையகமே நீ கொடுகின்ற அடையாள அட்டைக்கு மலேசியாவில் பயன் இல்லை என்றால் ஏன் கொடுக்கிறாய்.உனது அலுவலகத்தை ஏன் இங்கே வைத்திருக்கிறாய். இங்கே இருக்கிற அகதிகள் தொடர்பாக சீக்கிரமாக ஒரு முடிவு எடுத்து அவர்கள் நிம்மதியாக வாழ உதவி செய். நன்றி
இந்நாட்டில் தமிழன் ,ஈழதமிழன் இவர்களுக்குத்தான் கெடுபிடி ஆனால் பன்னாட்டு வாசிகள் சுதந்திரமாக சுற்றிதிரிகிரார்கள் காரணம் ?மதம் என்ற பாகுப்படுதான் ‘பூனைக்கு யார் மணிக்கட்டுவது ‘?
மலேசியாவில் வாழும் அகதிகளும், முஸ்லிம், ஏனைய மதம் என பார்க்கப்படுகின்றனர், முஸ்லிம் மதத்தை சார்ந்தவர் கைதுசெய்யப்பட்டால் ஓரிரு தினங்களில் விடுதலை, ஏனையவர்களுக்கு விடுதலையே இல்லை நாடுகடத்தப்படும் நிலை என்பதே இப்போதைய யதார்த்தம், ஆனால் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர் இருவரும் வைத்திருந்தது ஒரே விதமான ஆவண மாகவே இருக்கும் எனி னும் மதம் காரணமாக பாரபட்சமான நடவடிக்கை. தயவுசெய்து இவ் செய்தியை படிக்கும் வாசகர்கள், இலங்கையை சேர்ந்த ஓர் பெண்மணியும், பிறந்த குழந்தையும் அகதி என்ற ஒரே காரணத்தினால் 6 மாதமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
அதுக்குதான் நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன் BN ன்னுக்கு ஒட்டு போடாதேங்க போட்டால் நாசமாகிவிடும் என்று !!!!PKR ருக்க ஆதரவு அழியுங்க கஞ்சி கூழு குடிக்கிலாம்
மலேசியாவில் வாழும் எம்மை போன்ற இலங்கை அகதிகளை தொடர்ந்து பிடித்து நாட்டுக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் எங்களை இலங்கை தவிர்ந்த எந்த நாட்டிலாவது நிம்மதிஜான சுதந்திரமான வாழ்க்கை வாழ விரைவாக கலந்து பேசி நல்ல முடிவாக எடுங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே
ஷாந்தினி.. இதைப் படிக்கும் பாரிசானை ஆதரிக்கும் எந்த பரதேசிக்கும் புத்தி வராது..வராது,,,வராது வரவே வராது. ஏன்னா 50 வருஷமா ஊறிப்போன அடிமை ரத்தம்..கொத்தடிமைத் தனம்! அவனுங்க சப்பிப் போட்ட எலும்புத் துண்டுகளை கடிக்கும் போது வாயில் வரும் தன் ரத்தத் துளிகளையே ருசி பார்த்து அது அந்த எலும்புத் துண்டிலிருந்து வரும் ரத்தம் என்று நம்பி ஏமாறும் பைரவர்களாச்சே. இதை நாங்க எடுத்துச் சொன்னா எங்களையே கடிக்க வருதுங்க அந்த பைரவர்கள்…என்ன செய்யறது எலும்பைக் கடித்த பழக்கம் எளிதில் போகுமா என்ன? எங்களயும் கடிக்குதுங்க…
சாந்தினி உள்ளிருந்து விவரம் அறிந்து சொல்கின்றார் போலிருக்கு. இது வெறும் துளியே. இன்னும் எவ்வளவு பேர் அங்கே அடிப் பட்டு அல்லல்படுகிறனர் என்பதைக் கானா ம.இ.க. கபோதிகளுக்கு நேரமில்லை. ஆனால் பதவிக்கு அடித்துக் கொண்டு சாக நேரமிருக்கு. மற்ற NGO – க்களெல்லாம் பணம் வாங்கி பையில் போட்டுக் கொண்ட பிறகு காணாமல் பொய்த்து விட்டனர் போலும்.