2015-க்கான சிலாங்கூரின் பட்ஜெட்டை மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.. பக்கத்தான் இதுவரை கொண்டுவந்த வரவு-செலவுத் திட்டங்களிலேயே மிகப் பெரியது இதுதான். ஆனால், இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
2015-க்கான செலவுகள் ரிம2.42 பில்லியனாக இருக்கும் எனவும் வருமானம் ரிம1.97 பில்லியனாகவும் இருக்கும் என அது மதிப்பிடுகிறது.
இதனுடன் ஒப்பிடும்போது இதற்கு முந்திய காலிட் இப்ராகிம் காலத்து பட்ஜெட் சிறியதுதான். அந்த பட்ஜெட்டின் ஒதுக்கீடு ரிம1.8பில்லியன் மட்டுமே.
பார்க்க, கேட்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு. செயல்பாட்டில் கவிழ்த்து விட்டீங்க அப்புறம் மக்களும் உங்களை கவிழ்த்து விட்டு விடுவார்கள். கவனம்.
நல்ல பட்ஜெட் ஆனால் இதுல்லாம் சாத்தியமாகுமா? துண்டு விழும் பணத்துக்கு மக்கள் தலையில் முளகாய் அரைக்காமல் இருந்தால் சரி.
மத்திய அரசிடம் சிலங்க்கூருக்கான ஒதுக்கீட்டை பெற்றால் பற்றாகுறையை சரி செயிது விடலாம்!