கடந்த வெள்ளிக்கிழமை காலமான ஜி.தினேஷாவின் பெற்றோர், தங்களுக்கு மகளின் மருத்துவ அறிக்கை கொடுக்கப்படவில்லை என அசுந்தா மருத்துவ மனைக்கு எதிராக இரண்டாவது முறையாக போலீசில் புகார் செய்துள்ளனர்.
“எங்களுக்கு உதவி செய்ய ஒரு வழக்குரைஞரையும் ஏற்பாடு செய்யப்போகிறோம்”, என தினேஷாவின் உறவினர் ரமேஷ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
விவகாரத்தை ஊடகங்களுக்கு எடுத்துச் சென்றதால் மருத்துவ மனை மருத்துவ அறிக்கையைக் கொடுக்க மறுப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே, அசுந்தா மருத்துவ மனை தலைமை செயல் அதிகாரி பீட்டர் டி.எல். லியோங் மருத்துவ அறிக்கைக்காக அக்குடும்பத்தினர் முறையாக மனுச் செய்ய வேண்டும் என்றார்.
துயரத்தில் ஆத்திரப் படாதீர்கள். அவசரப் படாதீர்கள். கேட்க வேண்டிய முறையில் கேட்டல் தன்னால வரும் ரிப்போர்ட்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரப்படவில்லை.முறையாகத்தான் கேட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு உண்மை நிலவரத்தை விளக்கியதால் மருத்துவமனை தரப்புதான் ஆதிரப்பட்டிருக்கிறது.ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்துவிட்டு அந்த பிஞ்சு உயிரையும் பறித்துவிட்டு நெஞ்சில் கொஞ்சங்கூட ஈரமில்லாமல் நாடகமாடும் இவர்களுக்கு ஆண்டவன் நின்று நிதானமாக கொடுப்பான் பரிசு.
ஆண்டவன் நின்று நிதானமாக தண்டனை கொடுப்பான் என்று
நாமும் நின்று கொண்டு இருந்தால் தப்பு செய்கிறவன் எப்போது இறந்த பிறகா தண்டனையை அனுபவிப்பான் , ஆண்டவனுக்கு இப்போது நிதானம் இல்லையா
எப்போதும் நிதானத்துடன் இல்லாது இருப்பவன் பைத்தியக்
காரன் . கரிகாலன் ஒருவன் இறந்த பிறகு அவன் தண்டிக்கபட்டால் யாருக்கு அவன் தண்டனையை அனுபவித்தான் என்று. சும்மா எடுத்ததுக்கு எடுத்தாலும்
ஆண்டவனை கூப்பிடாதீர்கள் அவனுக்கு ஒன்னுக்கு இரண்டு இருக்கிறதாம் ஒய்வு கொடுங்கள்
ஆண்டவன் மேல் பாரத்தை போட்டால்,மருத்துவ அறிக்கை வீடு
தேடி வரும். நம்புங்கள் எந்த காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கிறது?
எதையும் நிதானமா செயில்படுத்தினால் நல்லது, இந்த விசியத்தில் எடுத்தேன் கவுத்தேன் என்று போனால் ஒரு நியாமும் கிட்டாது.
அன்பு செம்பெருத்தி சகோதர்களே நாம் நமக்குள் காரசாரமா கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும் நாம் அனைவரும் ஒரு தாய் (இந்தியன்) மக்கள்.
செல்வி தினாஷா விசியத்தில் நாம் நமக்கு தெரிந்த சட்ட ஆலோசனைகளை சொல்லலாமே தவிர, காரசாரமான விவாதங்களை தவிர்ப்போமே, அதுதான் நாம் செல்வி தினாஷாவுக்கு செய்யும் மௌனஅஞ்சலி.
பொறுத்தார் பூமி ஆழ்வார்.