நஸ்ரி: கிழக்கு சாபா செல்ல பயமாக இருக்கிறது

nazகிழக்கு  சாபா ஒரு  பாதுகாப்பான  இடமல்ல  என்பதைத்  தொடர்ந்து  வலியுறுத்தும்  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  காவலர்  துணையின்றி  அங்கு  செல்ல  மாட்டாராம்.

“பாதுகாவலர்கள்  துணைக்கு  இல்லாமல் கிழக்கு  சாபா  போக  மாட்டேன்”, என  அவர்  கூறியதாக  சின்சியு  நாளேட்டின்  இணையப்  பதிப்பு  தெரிவித்தது.

 

பாதுகாவலர்கள் இருந்தாலும் தம்மால்  அங்கு  நிம்மதியாக  தூங்க  முடியாது என்றாரவர்.

கிழக்கு  சாபா  பாதுகாப்புத்  தளபத்யம்  அங்கு இருப்பதே  அந்த இடம்  பாதுகாப்பானது  அல்ல என்பதைக்  காண்பிப்பதாகக்  குறிப்பிட்ட  நஸ்ரி, அதை  மூடி  மறைப்பதைவிட  வெளிப்படையாக  பேசுவதையே  தாம்  விரும்புவதாகவும்  தெரிவித்தார்.