மகாதிர்: அம்னோ பேராளர்கள் தலைவர்களைக் கண்டிக்க வேண்டும்

drmஉடல்நலம்  குன்றியிருந்தாலும்  மனத்தில்  பட்ட  கருத்துகளைப்  பகிர்ந்துகொள்ள தயக்கம்  காட்டுவதில்லை முன்னாள்  பிரதமர்  டாகடர் மகாதிர்  முகம்மட்.

அந்த  வகையில்  அம்னோவைச்  சீரழிக்கும்  பிரச்னைகளை விவரித்த   மகாதிர், தலைவர்கள்  தவறாக  நடந்துகொள்ளும்போது  அவர்களைக்  கண்டிப்பது  அவசியமாகும்  என்பதையும்  வலியுறுத்தினார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தொடர்ந்து  குறைசொல்லிவரும்  மகாதிர்,  அவரின்  தந்தையார் அப்துல் ரசாக்கும் மற்ற  அம்னோ  தலைவர்களும்கூட  குறைசொல்லப்பட்டதுண்டு  என்றார்.

“நான் தாக்கப்பட்டேன். (அம்னோ  தேர்தலில்)  தோற்றுப்போகும் அபாயமும்  இருந்தது”, என்றவர்  சொன்னார்.

கண்டிக்காவிட்டால்  தலைவர்கள்  தாங்கள்  செய்வது  சரியே  என  நினைத்துக் கொண்டிருப்பார்கள், அது  சரியில்லாத போதும்.

“நானும்  பூமிபுத்ரா,  அம்னோ விவகாரங்கள்  தொடர்பில்  தனிப்பட்ட  முறையில்  பல தடவை கண்டித்திருக்கிறேன்.  ஆனால்,  பயனில்லை.  அதனால்தான்  வெளிப்படையாகவே  கண்டனம்  தெரிவிக்க  வேண்டியதாயிற்று”, என  மகாதிர்  கூறினார்.