அதிகாரக் கோட்டையைக் கதிகலங்க வைத்த பதின்ம வயது மலேசியாகினி

mkini மக்கள்  கருத்து:எங்களுக்காகக் குரல்கொடுக்க  இருக்கவே இருக்கிறது 15-வயது  மலேசியாகினி

எக்ஸோலோட்: @Kini-யை வடிவமைத்த அம்போஸ்  போ-வுக்கும்  மலேசியாகினி  நிறுவனர்களுக்கும் பாராட்டுகள்.

மலேசியாகினி  15ஆம்  ஆண்டு விழா  நிகழ்வுகள்  அற்புதமாக  இருந்தன. . உணவு  அப்படித்தான்  சுவையாக  இருந்தது, மகிழ்ச்சியும்  நட்புறவுறவும்  நிறைந்த  சூழல். பலத்த  மழையால்கூட  எங்கள்  உற்சாகத்தைக்  குறைக்க  முடியவில்லை.

முஷிரோ: அருமையான  நிகழ்வு. பழக்கப்பட்ட,  சுவாரஸ்யமான  பல  முகங்களைக்  காண  முடிந்தது.

தலைமை  செயல்  அதிகாரி  பிரமேஷ்  சந்திரன், தலைமை- செய்தியாசிரியர்  ஸ்டீபன்  கான், செய்தி  ஆசிரியர்  பாத்தி  அரிஸ்  ஒமார்   போன்றோரை  நேரில்  பாராட்ட  வாய்ப்பு  கிடைத்ததை  நினைத்தால் மகிழ்ச்சியாக  இருக்கிறது. மலேசியாகினி  மலேசிய  இதழியலை  இன்னும்  பலபடி  முன்னே  கொண்டு  செல்ல  வேண்டும்.

புரோஆர்டி: சனிக்கிழமை  நிகழ்வில்  கலந்துகொண்ட  எனக்கு  என்  பெயர்  மலேசியாகினி  சுவரில்  ஒரு  செங்கல்லில் பொறிக்கப்பட்டிருப்பதைக்  காண  உடல்  புல்லரித்தது.

மலேசியாகினி அச்சுறுத்தலுக்குப்  பயந்து தலைவணங்காது  ‘உண்மையைச்  சொல்ல  தலைநிமிர்ந்து  நிற்கும்’ என்று  கூறக்கேட்டு உள்ளம்  பூரிக்கிறது.  வாழ்க  மலேசியாகினி!

ஒனிபென்: செய்திகளின்  மறுபக்கத்தை  எடுத்துரைக்க  முன்வருவதற்கு வாழ்த்துகள்.  நமக்குச்  செய்திகளை  அச்சமின்றியும்  தயவுதாட்சண்யமின்றியும்  உள்ளதை  உள்ளப்படி  சொல்லும்  செய்தியாளர்கள்தான்  தேவை. மலேசிய  குடிமக்களாகிய  நாங்கள், வாக்களிக்குமுன்னர்,  முக்கிய  தேசிய  விவகாரங்கள் பற்றிய அனைத்து  விவரங்களையும்  தெரிந்துகொள்ள  விரும்புகிறோம்.

வெர்சே:  மலேசியாகினி  உறுப்பினர்கள்  அனைவரும்  அன்றைய  மாலைப்பொழுதை  மனமகிழ்ச்சியுடன்  கொண்டாடி  இருப்பார்கள். நேரில்  சென்று  நிகழ்ச்சியில்  கலந்துகொண்டவர்களை நினைத்தால்  பொறாமையாக  இருக்கிறது.  ஒத்த  கருத்துடையவர்களுடன்  கூடிப்  பேசி இருப்பார்கள், மகிச்சியுடன் பொழுதைக்  கழித்திருப்பர்.

மலேசியாகினி  செய்திகள்  நாட்டின்  மூலை  முடுக்கெல்லாம்  செல்லும்  அந்த  நாளை  எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

அபாசிர்: புதிய  கட்டிடம்  நாட்டை  பொய்யிலிருந்தும்  வெறுப்பை  விற்கும்  வியாபாரிகளிடமிருந்தும் விடுவிக்கும்  உங்கள்  முயற்சிகளுக்கு  அடையாளமாகத்  திகழ்கிறது.

நல்லதொரு  நாட்டை உருவாக்கும்  முயற்சியில்  சோர்ந்து  விடாதீர்கள்.

நியாயவான்:  நம்பிக்கை  எங்குள்ளதோ  அங்கு  நல்ல  எதிர்காலமும் இருக்கும்.  மேலான  நாட்டை  உருவாக்க போராடும்  நன்மக்களுக்கு  நீங்கள்தான்  என்றும்  நம்பிக்கை  அளிக்க  வேண்டும்.

கருப்புநிலா:  15 ஆண்டுக்காலத்தில் நாட்டில்  உள்ள  மலாய்க்காரர்களுக்கும்  சீனர்களுக்குமிடையில்  இனப்  பதற்றத்தை  உண்டுபண்ண  மலேசியாகினி  நிறையவே  பங்காற்றியுள்ளது.

இதைத்  தெரிந்துகொள்ள  வெகுதொலைவு  போக  வேண்டியதில்லை.  மலேசியாகினியின்  விவாதமேடையைப்  பாருங்கள். ஒருவர்  குரல்வளையை  மற்றவர்  கடித்துக்குதறத்  துடியாய் துடிக்கும்  என்ஜிஓ-களைப்  பாருங்கள்.

இந்த  உண்மையை  கான் மறுக்கவியலாது. இதைச்  “சாதனை”  எனக்  கருதும்  கானும்  அவரின் குழுவினரும்  வெட்கப்பட  வேண்டும்.

மீன்கொத்தி: தடைகளைக்  கண்டு  தயங்காமல்  போராடும்  மலேசியாகினியின்  விடாமுயற்சிக்கு  வாழ்த்துகள். உங்கள்  நற்பனி  தொடரட்டும்.

நாட்டை  உருவாக்கும்  பணியில்  நன்னெறிப்  பண்புகளைப்  போற்றி வளர்க்க  நினைக்கும்  மலேசியர்களின்  உண்மையான  ஆதரவு  என்றும் உங்களுக்கு  உண்டு

ஹாங் ஜிபாட்:  தடைகள்  பல  வந்தாலும்  அத்தனையையும்  தாண்டி  கொண்ட  இலட்சியத்தில்  குறியாய்  இருக்கும்  மலேசியாகினிக்கு  வாழ்த்துகள்.

முஸ்லிமான  எனக்கு , இஸ்லாம்  ஒரு  சமயமாக  அல்லாமல்  ஒரு அரசியல்  கட்சிபோல்  ஆகிவிட்டதைக்  காண  வருத்தமாக  இருக்கிறது.  எங்களுக்கு  சில  நேரம்  மலேசியாகினியுடன்  இணைவது  சிரமமாக  உள்ளது. காரணம்  தெரிந்ததுதான்.

சீராச்: கடந்த 15 ஆண்டுகளில்  மலேசிய  இதழியலில்  ஏற்பட்டுள்ள  அற்புதமான  நிகழ்வு மலேசியாகினி. தொடரட்டும் உங்கள்   மாபெரும் பணி.

எம்லா: மலேசியாகினிக்கும்  அதன்  70 பேரடங்கிய  குழுவுக்கும்  வாழ்த்துகள்.

‘ஆளுக்கொரு  செங்கல் வாங்குவீர்’ இயக்கத்தில்  பங்குபெற்ற ஆயிரக்கணக்கான  மலேசியர்களில்  நானும்  ஒருவன். மலேசியாகினி  தலைமையகம்  உருவாக  உதவ  நுடிந்ததில்  எனக்கு  மட்டற்ற  மகிழ்ச்சி.

ஆட்டத்தை  மாற்றுபவன்: நான்  தொடர்ந்து  சந்தாதாரராக  இருப்பேன். மலேசியாகினி  மேலும்  உயரங்களை  அடைவதைக் காண  விரும்புகிறேன். இத்தனை  ஆண்டுகளாக  உண்மையைச் சொல்லி  வரும்  உங்களுக்கு  நன்றி.

பெயரிலி_5fb: ஒரு  சாமானிய   மலேசியனான  எனக்கு  மலேசியாகினி  ஒரு  நம்பிக்கைச்  சுடர். என்னைப்  போல்  பல  மலேசியர்கள் மலேசியாகினி  நின்று  நிலைக்க  எங்களால்  முடிந்ததைச்  செய்ய  ஆயத்தமாக  இருக்கிறோம்.

தொடரும்  பயணம்  சுமூகமாக  இருக்காது  என்பது  நமக்குத்
தெரியும். ஆனால், நமக்கு  வேறு  வழியில்லை,  தைரியத்துடனும்  துணிச்சலுடனும்  முன்னேறிச்  செல்ல  வேண்டியதான்.

மலேசியாகினியின்  பணிக்கு நன்றி. மலேசியாகினி  இல்லையேல்  மலேசியா  என்னவாகி  இருக்குமோ.

அபா நாமா: அதிஅற்புதமானது மலேசியாகினி. அதிகாரக் கோட்டையையே  அது  ஆட்டம்காண  வைத்துள்ளது.

டெலிஸ்தாய்: பல  தசாப்தங்கள்  கழித்து   இந்த  நாளை,  நாட்டை  விடுவிப்பதில்  மலேசியாகினி  ஆற்றிய  முக்கிய  பங்கை  நினைத்துப்  பார்ப்போம்.