சிலாங்கூரின் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் அவர்களின் தொகுதி மேம்பாடுக்காக பக்கத்தான் ரக்யாட் அரசு கொடுத்த ரிம200,000 ஒதுக்கீட்டை நிராகரித்தனர்.
அந்த ஒதுக்கீட்டை அவர்கள் அவமதிப்பாக கருதுகிறார்கள்.
பக்கத்தான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கு ரிம700,000 கொடுத்த அரசு தங்களுக்கு ரிம200,000 கொடுத்தது தங்களை அவமதிப்பதாகும் என எதிரணித் தலைவர் ஷம்சுடின் பியாஸ் கூறினார்.
ஆனால், ஷம்சுடின் அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ காரை ஏற்றுக்கொண்டார்.
பக்கத்தான் அரசாங்கம் இதாவது கொடுக்கிறதே .பி என் அரசாங்கம் ஒன்றுமே தருவதில்லை!!! இந்த அநியாயத்தை எங்கே போய் முட்டிக்கொள்ள ?
உண்மைதானே, 2 லட்சம் கொடுத்தால் எப்படி பத்தும், 7 லட்சம் கொடுத்தால்தானே, 2லட்சம் செலவு செய்து விட்டு, 5 லட்சம் சுருடிக்கலாம்.
எதிர்க்கட்சி எம் பிக்களுக்குன் அடுன் களுக்கும் ஒண்ணுமே கொடுக்காத பி என் பரவாயில்லே, எதோ கொஞ்சம் கொடுக்கும் பாகத்தான் அவமதிக்கிறது? இது நால்லா இருக்கே?
கமிஷன் குறைவாக கிடைக்கும் என்பதால் இருக்குமோ.
கமிஷன் குறைவாக கிடைக்கும் என்பதால் வேண்டாம் என்கிறார்களோ?
அரசியல்வாதிக்கு கமிஷன் இல்லாத பொழப்பும் ஒரு பொழப்பா?
சட்டமன்ற தொகுதிக்கு கொடுக்கப் பட்ட நிதியினை வேண்டாமென சொல்லிவிட்டு காரை மட்டும் எடுத்துகிட்டா எப்படி..? அதையும் வேண்டாமென்று சொல்லி இருந்தா மரியாதையாக இருக்குமே..?
PKR ,DAP < PAS அரசியல் கேவலமா இருக்கு? 700,000 BN கு ஒதுக்கி இருந்தால் BN அவர்கள் வேணாம் என்று சொல்லி இருந்தால் PR நிலை ஒரு படி ஏறி இருக்கும். சட்ட மன்ற உறுப்பியம் என்பது மக்களுக்கு சரிநிகர் பதவிதானே PR போல 700,000 தருவதுதான் சரி. இப்போதும் மோசமில்லை அடுத்த மாநில எக்ஸ்கோவில் முடிவு செய்து 700,000 தர சட்ட மன்றமும் YAB அச்மினுமும் தாரளமாக முடிவு செய்யலாம்.
இன்னொரு கேள்வி? இதை காடிர் இப்ராகிம் செய்து இருந்தால் என்ன நடந்து இருக்கும்? காடிர் BN காற்று என்று பேசிய மொக்க அறுவைகள் அச்மினை எந்த அருவையில் வைக்கிறது என்று யாராச்சும் பேசுங்களா?
வேண்டியவன் செய்தால் தர்மம் வேண்டாதவன் செய்தால் அதர்மம் அதற்கு கை, கால், மூக்கு முக்கியமா வாங்கி தின்ற நாக்கு எல்லாம் வெச்ச உலருவாயனகள் கொட்டமப்பா இந்த அரசியல் தெரு கில்லாடிகள்!
அஸ்மின் முயற்சிகள் பாராட்டலாம்.ஆனால் PR நடுவண் அரசியலில் எதிர்க்கட்சி என்பது நினைவில் இருக்கட்டும். மாநில வீட்டுமனை ,பள்ளிகள் கட்ட நடுவண் ஒப்புதல் வேண்டும் மாநில பன் சட்ட மன்ற நாடுளுமன்ற காக்கிகள் உதவுமா என்று ஒப்பீடல் செய்யுங்கள்.
அமாம் PKR ல தான் Penyelaras சாபங் இருக்கே அதுக்கு காசி இல்லையா? நம்ப சிலாங்கூர் இந்தியர்கள் சாபங் தைகேய்கள் மணிக்கா, ராத , ரவி , சேவியர் , சிவராசா, ….. எப்படி சமாளிகிறாங்க ? BN கே கண்ணை திறந்துள்ள அஸ்மின் இவர்களின் கதவுகளையும் திறக்க வேண்டும். இபோதே சட்ட மன்ற சபைக்கு உரக்க ஒரு ஒஹ் போடலாம்.
சிலாங்கூரின் BN சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் தொகுதி மேம்பாடுக்காக கொடுத்த நிதி ஒதுக்கீட்டை, பிரதமரைபோல் ” BRIM “.
என்ற லஞ்சமாக கொடுங்கள் கேட்கிறார்களோ ?
சிலாங்கூரின் BN சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் தொகுதி மேம்பாடுக்காக கொடுத்த நிதி ஒதுக்கீட்டை, பிரதமரைபோல் ” BRIM “.
என்ற லஞ்சமாக கொடுங்கள் என்று கேட்கிறார்களோ ?
தோ பாருங்கப்பா, ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் மந்திரி புசாருக்கு யார் யாரோ அறிவுரையும் அறவுரையும் சொல்றாங்க
தே.மு.-க்கு ஓட்டுப் போட்டவங்க முகத்திலே செருப்பாலா அடிச்ச மாதிரி இருக்குமே. நிதி ஒதுக்கீடு மக்களுக்காகத்தானே. இவர்களுக்கு அல்லவே. அப்புறம் ஏன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கனும். அப்ப இந்த தே.மு. கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்தம் சட்டமன்ற நிலைக்கு உட்பட்ட மக்களைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. இவர்களின் ஆணவ செருக்கு மட்டுமே முக்கியம். இதற்குத்தான் சைவ சித்தாந்தம் படிக்கணும் என்பது. அவனவன் ஆணவம் குறைய.
மலை முழுங்கி பக்கிகளுக்கு ரி.ம 200 எல்லாம் ஒரு பணமா ?உண்ட பிறகு வாய் துடைக்க பயன்படும் துணிக்கு பதிலாக இந்த தொகை அவர்களின் வீட்டு வேலைக்காரியின் ஒருநாள் செலவு தொகை…