விவேகனந்தா ஆசிரமம் வாணிப நோக்கத்திற்காக மேம்படுத்தவும் முடியாது, மேம்படுத்தவும் கூடாது, குலா

 

Vivekenanda Ashram1விவேகனந்தா ஆசிரமத்தின் நிலை என்ன என்பது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரியுடன் விவாதிப்பதற்காக முன்னாள் மஇகா தலைவரும் அமைச்சருமான வி.டி. சம்பந்தனின் மகள் தேவ குஞ்சரி இன்று (நவம்பர் 25) அமைச்சரை நாடாளுமன்றத்தில் சந்தித்தார் என்று குலா கூறுகிறார்.

விவேகனந்தா ஆசிரமத்தை ஏன் தேசிய பாரம்பரிய சொத்தாத அறிவிக்க வேண்டும் என்பதற்கு அளிக்கப்பட்ட துள்ளியமான விவரங்களை அமைச்சர் மிகக் கவனமாக கேட்டதாக அவர் கூறினார்.

ஆசிரமத்தை தேசிய பாரம்பரிய இடமாக அறிவிக்கும் நோக்கம் குறித்த அறிக்கை ஆசிரமத்தின் அறங்காவலர்களுக்கு நவம்பர் 12 இல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் ஆசிரமத்தை தேசிய பாரம்பரிய இடமாக அறிவிப்பதற்கு அறங்காவலர்கள் ஒப்புதல் அளிப்பார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்ததாகவும் மு. குலசேகரன் மேலும் கூறினார்.

தேவ குஞ்சரியுடன் வந்திருந்த வழக்குரைஞர்கள் ஆசிரமத்தை தேசிய பாரம்பரிய சொத்தாக அறிவிக்கும் நடவடிக்கையில் அமைச்சர் பெரும்20141125_154649 (1) பங்காற்ற வேண்டும் என்று அமைச்சரை கேட்டுக்கொண்டனர்.

இவ்விவகாரம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுவதற்காக அது பற்றிய முழு விபரத்தையும் ஓர் அறிக்கையாகத் தயாரித்து தருமாறு வந்திருந்தவர்களை அமைச்சர் நஸ்ரி கேட்டுக்கொண்டார்.

30 விழுக்காடு பூமிபுத்ராக்களுக்கு கொடுக்க வேண்டும்

விவேகனந்தா ஆசிரம் மேம்படுத்தப்பட்டால் விற்கப்படவிருக்கும் கொண்டோ யுனிட்களில் 30 விழுக்காடு பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் வீட்டுடமை கொள்கை சம்பந்தப்பட்டதாகும். மேலும் எத்தனை இந்தியர்கள் மில்லியன்கள் மதிப்புடைய கொண்டோக்களை வாங்க முடியும் என்று அவர் வினவினார்.

விவேகனந்தரின் தத்துவங்களை பரப்புவதற்கென்றே தோற்றுவிக்கப்பட்ட ஆசிரமத்தை ஏன் மேம்படுத்த வேண்டும் என்பதற்கு அறங்காவலர்கள் விளக்கமளிக்க வேண்டும்.

“ஆசிரமத்தை மேம்படுத்தும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக பகிரங்கமாக அறிவிக்குமாறு நான் அறங்காவலர்களை கேட்டுக்கொள்கிறேன்”, என்று வலியுறுத்திய குலசேகரன், “அவர்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்ளுமாறும்” கேட்டுக்கொண்டார்.