மலேசியாவில் பிறந்த சீனர், இந்தியர் குடியுரிமை பற்றி அம்னோ உறுப்பினர்கள் கேள்வி கேட்கக் கூடாது என அம்னோ மகளிர் பகுதித் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் வலியுறுத்தினார்.
“இந்நாட்டில் ஆதியில் வந்த நம்முடைய சிறப்புரிமைகள் பற்றி அவர்கள் கேள்வி கேட்காதவரை நாமும் இந்நாட்டின் குடிமக்களாகிய அவர்களின் உரிமையை மதிக்க வேண்டும்”, என அம்னோ மகளிர் பகுதியின் ஆண்டுக் கூட்டத்தில் கொள்கையுரை ஆற்றியபோது அவர் குறிப்பிட்டார்.
சபாஷ் / நன்றி / மிக்க நன்றி . தங்கள் தெரியப் படுத்திய கருத்து உண்மையாக தங்கள் மனதில் இருந்து வந்ததாக இருப்பின், கருத்துக்கு தலை வணங்குகிறேன் .நாங்கள் இதுவரை எதையும் எல்லைமீறி கேட்டது இல்லை , எங்களுக்கு கொடுக்கப்பட உரிமைகளையே இதுவரையில் கேட்டு வருகிறோம் , நேர்மையான , உண்மையான வழிகளில் அவை வலங்கப்படுமயீன் நிச்சயமாக நாங்கள் ஒன்றினையோம் . நன்றி .
சபாஸ் அமமாச்சி உங்களுக்கு உரிமை ரத்தம் ஓடுது. படித்தவர்கள் படித்தவர்கள்தாம். மெலாயு யாரு ,பூமிபுத்ரா யாரு, மலேசியர்கள் யாரு, அந்நியர்கள் யாரு , ஓரங் அஸ்லி யாரு , மொத்தத்தில் மெர்டேகா என்றால் என்ன யாருக்கு என்று UMNO வில் மொழி உரிமை பற்றியும் சின்ன போரம் நடத்தலாம்.
நல்ல கருத்தை உண்மையான தகவலை மாநாட்டில்
பேசிய ஷரிசாட் பாராட்ட பட வேண்டியவர் .
நல்லது.
அதே சமயத்தில் எங்கள் உரிமைகள் மீது கை வைக்க வேண்டாம் என்றும் சொல்லி வையுங்கள்!
ஷாரிசாட், நீங்கள் சொல்வது நியாயம் இல்லையே. “ஆதியில் வந்த சிறப்புரிமைகள் பற்றி அவர்கள் கேள்வி கேட்காத வரையில்….”!! 1957ல் ஏற்றுக்கொள்ளப்பட்டதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆதியில் வந்த அந்த சிறப்புரிமைகளில் (1957 சாசனத்தில் இடம் பெற்று இருந்தவை) சில இன்று அவ்வளவாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவு umnob அதனை ஊதி2 பெருக்கி, பெரிதாக்கி அதன் தோற்றத்தை முற்றும் முழுவதும் மாற்றி வைத்து உள்ளதே – தன்னிடமிருக்கும் அரசியல், நிர்வாகப் பலத்தைக்கொண்டு – நியாயமற்ற முறையில். இந்த நிலை நாளுக்கு நாள் மேலும் மோசம் அடைந்து வருகிறதே.. அதே நேரத்தில் சிறுபான்மையோருக்கு பாதுகாப்பு கொடுக்கும் சில 1957 சாசன சட்ட விதிகளை நீங்கள் துவாரமிட்டு சுருக்கி, வதக்கி இருக்கும் இடம் தெரியாமல் செய்து வைத்து உள்ளிரே..!! நீங்கள் இடை2யே செய்துவரும் ஒருசார்புசாதக, நீதியற்ற சட்ட இடைசொருகல்களைத்தான் சிறுபான்மையோர் கேள்விகேட்கின்றனர். இந்த அநியாயத்தை சுட்டிக்காட்டினால் கேட்பவர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் என்பது அதிகாரத்துவ ஆணவமாகும். உங்களின் கூற்றுபடி, நீதி வேண்டுவது தவறு..!!
” வந்தேறிகள் ” என்று கூறியதற்கு, உங்களுடைய தோழமை கட்சி, நீங்களும் வந்தேறிகள்தான் என்பதை மறவாதீர்கள் என்று நினவு படுத்தியபோது, நாங்கள் பயணிகளாக இந்நாட்டிற்கு வந்து தங்கி விட்டோம் என கூறி நகைச்சுவையை ஏற்படுத்தியர்வர்கள்,
எங்கே மற்றவர்கள் குடியுரிமை பற்றிக் கேள்வி எழுப்பி, நமது குடியுரிமை/சிறப்புரிமை பற்றி விளக்கம் கொடுத்து மீண்டும் ஒரு நகைச்சுவை அலையை ஏற்படுத்தி விடுவோமோ என்ற பயம் ஷரிசாட்டுக்கு வந்திருப்பது நியாயம்தானே.
இடை2யே செய்துவரும் சாசன சட்ட இடைசொருகல்களைத் தவிர்த்து, 1957 அரசியல் சாசனத்தில் உள்ள சில முக்கிய சட்டங்களுக்கு உங்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப, முறையற்ற முறையில், உங்களுக்கு சாதகமாக வியாக்கினம் வேறு செய்து கொள்கின்றீர்களே..!! எப்படி கேட்காமல் இருப்பது?!
ஆஹா, ஓஹோ என்றெல்லாம் பாராட்ட வேண்டாம். நம்பள கேள்வி கேட்டா இந்த அம்மாவோட பூர்வீகம் எல்லாம் கடைத்தெருவுக்கு வந்து விடும். அதனாலாத்தான் நானும் பூர்வீக மலாயக்காரச்சி என்று தன்னையும் அவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டு பாடுகின்றார். ஆகா மொத்தம் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள போடும் அரசியல் சொல்லாட்சி. அவ்வளவுதான். இதற்க்கு ஏன் நாம அலட்டிக்கணும்.
உணர்ச்சிகரமான விவகாரங்களை விவாதிக்க வண்டாம் என்று வேண்டுகூள் விடுத்தும் கூட Hold up your end of bargain, Hold up your end of bargain, Khairy tells non-Malays. என்றும் தாய்மொழிப்பள்ளிகள் பற்றியும் பேசியிக்கிறான் உம்நோ இளைஞர பகுதித் தலைவன் கைரி. இதைப் படித்தும் நாம் திருந்தாவிட்டால் நாம் போட்டிருக்கும் செருப்பை எடுத்து நாமே தலையில் அடித்துக் கொள்ளவேண்டியதுதான். ‘நாம்’ என்று நான் இங்கே குறிப்பிட்டது ‘அவர்களுக்கு’ வக்காலத்து வாங்கும் ‘அந்த’ சிலரை.
இப்படி எப்பொழுதாவது அத்தி பூத்தது போல தோன்றும் கருத்துகள் போற்றப்பட வேண்டியவை . ஷரிசாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது . வாழ்த்துகள்
மக்கள் முன் மேடையில் ஒரு பேச்சி. மேடைக்கு பின்னால் வேறு. இதுதானே நாம் கடந்த 57 ஆண்டுகளாக கண்டு வருகிறோம். குடியுரிமை உள்ளவர்கள் அனைவருமே “வந்தேறிகள்தான்”.இந்த அம்மனிக்கு, அம்னோவில் பல எதிரிகள் உருவாகுவது நிச்சயம். எது எப்படியோ நன்றி அமைச்சரே. உங்கள் சக தோழர்களுக்கு விளக்கம் கூறுங்கள்.நன்றி! நன்றி! நன்றி!
ஆச்சி எந்த வூர் .
மூஊஊஊ
ஷரிசாத் உன் பேச்சையும் கேட்க்க ஒரு காக்ககூட்டம் உள்ளதே? விளம்பரம் தேடும் மாமி ஷரிசாத்.
தமிழ் முத்து, இன்னும் மாத்திரை சாப்பிடலியா?
தொடரட்டும் தொடரட்டும்
அத்தை…பெரிய அத்தை…இதை இந்த 50 வருஷமா நீங்க உணரலியே ? நாங்க என்னத்த பெரிசா கேட்கறோம்? வேளிநாட்டு கார், பங்களாவா கேட்கறோம்? எங்களை விட்டுப் போனதைக் கேட்கறோம், நாங்க தொலைத்ததை தேடறோம். அரசாங்க வேலை வாய்ப்பைப் பறிச்சீங்க. சிறப்பா படிக்கற எங்க பிள்ளைங்க அரசாங்க உயர்கல்வி பெறுவதை தடுத்தீங்க. அடிமைப்பட்டுப் போனதாலே எங்களால அதை எல்லாம் திரும்பப் பெற முடியலே. விட்டுட்டோம். ஆனா நாங்க பயந்துட்டதா நீங்க தப்புக்கணக்குப் போட்டீங்க. நாங்க இங்க உழைச்சி இங்க தானே போட்டோம்? இங்கே தானே அழிச்சோம்? எங்க பிள்ளைகளை மதம் மாத்தனீங்க, எங்களுட செத்த பொணங்கல கூட விடலே மதம் மாத்தனீங்க அப்புறம் எங்களோட கோயில்களை காரணமே இல்லாமே உடைச்சீங்க. இது மனித உரிமை மீறல் இல்லையா? ஆனா நாங்க முழிச்சிட்டோம். அதனால வந்தது தான் HINDRAF. அதனால நீங்க இழந்தது மக்களின் நம்பிக்கையை. ஆனா இப்பக் கூட உங்கள நாங்க நம்பத் தயாரா இல்லே. காரணம் நேத்து ஒரு பேமானி…தாய்மொழிப் பள்ளிக்கூடத்திலே மலாய் தான் தொடர்பு மொழியா இருக்கணும்னு சொல்றான். இத நாங்க ஏத்துக்க முடியுமா? தமிழ்ப் பள்ளியிலே தொடர்பு மொழி மலாய் மொழின்னா அப்புறம் எதுக்கு தமிழ்ப்பள்ளின்னு பேர் மட்டும்? இதை நாங்க ஏத்துக்கிட்டா அப்புறம் எல்லா கோயில்லேயும் மலாய் இல்லாட்டி அரபு மொழியில தான் எங்க பூசாரிங்க மந்திரம் சொல்லணும்னு சொல்லுவீங்க, சரி தானே, பெரிய அத்தை? இப்ப கூட நாங்க என்ன கேட்கறோம்? நீங்க ஆண்டது போதும்னு தானே சொல்றோம்