மலாய்க்காரர்-அல்லாதார் சமுதாய ஒப்பந்தத்தில் கொடுத்த “மூல வாக்குறுதி”யை மறந்து விடக்கூடாது என்பதை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் நினைவுவுறுத்தியுள்ளார்.
நாடு சுதந்திரம் பெற்றபோது மலாய்க்காரர்- அல்லாதார் குடியுரிமை பெற அனுமதித்து மலாய்க்காரர்கள் தியாகம் செய்துள்ளனர் என கைரி இன்று அம்னோவின் ஆண்டுக்கூட்டத்தில் கூறினார்.
பதிலுக்கு மலாய்க்காரர்- அல்லாதார் மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகளையும் மலாய் மொழியைத் தேசிய மொழியாகவும் ,மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையையும் ஏற்றுக்கொண்டனர்.
“ஆனால், அவ்வொப்பந்தத்தை மதிக்காதவர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.
“மலாய்க்காரர்கள் அதை ஏற்றுக்கொண்டு (மலாய்க்காரர்- அல்லாதாரின்) குடியுரிமை பற்றிக் கேள்வி எழுப்பாமலும் தாய்மொழிப் பள்ளிகளை மூடாமலும் இருக்கும்போது அவர்கள் (மலாய்க்காரர்- அல்லாதார்) மட்டும் மூல வாக்குறுதியை மதிக்காதது ஏன்?
“மலாய்க்காரர்களின் சிறப்புச் சலுகைகள் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுவது ஏன்? மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மை பற்றிக் கேள்வி எழுப்புவது ஏன்? மேலும் தேசிய மோழியை அறியாதவர்களும்கூட இருக்கிறார்கள்”, என கைரி கூறினார்.
மறந்து விட்டு பேசுவது யாரோ?. நீரே.
அதைத்தான் நாங்களும் சொல்லுகிறோம். மூல வாக்குறுதியை மறந்துவிட்டு இப்படி மூடனைப் போலவா பேசுவது!
குட்டையை குழப்புவது யார் ???? முதுகுக்கு பின்னால் நின்று சதி செய்யாதே !!!!!!!!!!! வருத்தபடுவீர் !!!??
வாய் வீரம் பேசுவதால் யாருக்கும் நன்மை இல்லை தம்பி .
பேசு பேசுகொண்டிரு,
உன்னால் முடிந்தவரை பேசு,
பேசுவது உன் உரிமை,
உன் பேச்சை கேட்க்க ஒரு காக்க கூட்டம்,
ஆனால் ஒரு எழவும் நடக்கபோவதில்லை.
என்ன மூல வாக்குறுதி? மூன்று இனங்களின் சம பங்கினால்தான் இன் நாட்டுக்கு சுததந்திரம் கிடைத்தது இதை கண்டுகொள்ளாமல் காகாதிரின் இன வாத அரசியலில் ஊறிப்போன அம்னோ மலாய்க்காரன் கள் இப்போது நம்மையே முட்டாள்கள் ஆக்கி எள்ளி நகை ஆடுகிறான்.
தங்கள் இனத்தில் ஹீரோவாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக மற்ற இனங்களின் உரிமைகளின் மீது கை வைக்கும் இவனெல்லாம் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி.
நாடு சுகந்திரம் அடைந்து 57 கழித்தும் அப்போது சுகந்திரத்திற்கு மூன்று இனங்கள் ஆதரவு தேவை என்று
ஆங்கிலேயன் கூறியதை மறந்து விட்டு இப்போது அம்னோ
மாநாட்டில் தன்னை ஹீரோவாக காட்ட சிலர் பேசுகின்றனர் .
இந்த வீரத்தை அடுத்த தேர்தலில் மைக் போட்டு பேசி காட்டு பாங்…நாங்களும் பார்க்கிறோம் ! எந்த மஇகா புள்ளி இவரை அழைத்து வீடு வீடாக வருகிறார் என்று காத்திருக்கிறோம் ???