பல்கலைக்கழகங்களுக்கான நிதிக் குறைப்பால் கட்டணங்கள் உயரலாம்

cutsகல்வி  அமைச்சு  2015-க்கான  அதன் பட்ஜெட்டில்  பல்கலைக்கழகங்களுக்கான  நிதியைக்  குறைத்தது  ஏன்  என்று  வினவும்  பிகேஆர்  எம்பி  சிம்  ட்ஸி  ட்ஸின்,  இதனால்  கல்விக்  கட்டணம்  உயரலாம்  என்றார்.

2014 பட்ஜெட்டுடன்  ஒப்பிடும்போது  புதிய  பட்ஜெட்டில்  ரிம1.05 பில்லியன் அதாவது 12.36  விழுக்காடு  குறைக்கப்படுகிறது.

20  பொதுப் பல்கலைக்கழகங்களில்  18-க்கான  நிதி  குறைக்கப்படுகிறது என்று  கூறிய  அவர்,  அதிகமாக  பாதிக்கப்படுவது  யுனிவர்சிடி  புத்ரா மலேசியாதான்  என்றார். அதற்கான  நிதியில்  35.56 விழுக்காடு  குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலவரத்தைச்  சமாளிக்க  பல்கலைக்கழகங்கள்  ஒன்று,  கல்விக்  கட்டணத்தைக்  கூட்டலாம்  அல்லது  ஆராய்ச்சிக்கும்  மேம்பாட்டுக்குமான  செலவுகளைக்  குறைக்கலாம்  என்றாரவர்.