மசீச ‘தேச நிந்தனைச் சட்டத்தை ஆதரிக்கிறது’, அம்னோ செராஸைச் சாடுகிறது.

weeமசீச ‘தேச நிந்தனைச் சட்டத்தை ஆதரிக்கிறது’, அம்னோ  செராஸைச்  சாடுகிறது.

மசீச,  அதன்  துணைத்  தலைவர்  வீ  கா  சியோங்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பிஎன்  பங்காளிக்  கட்சிகளுடன்   கலந்துபேசாமலேயே   தேச  நிந்தனைச்  சட்டத்தைத்  தொடர்ந்து  வைத்திருக்க  முடிவெடுத்து  விட்டதாக    குறைப்பட்டுக்கொண்டார்  எனக்  கூறப்படுவதை  மறுத்து,  வீ  “தவறாகப்  புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்”  எனக்  கூறுகிறது.

அம்னோ  செராஸ்  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  வீ-யைக்  கடிந்து  கொண்டிருப்பதற்கு  மறுப்பறிக்கை  விடுத்துள்ள  மசீச  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  லுவா  சூன்  ஹன், அவரது  குற்றச்சாட்டு  “ஆதாரமற்றது…..  அவர் வீ  கா  சியோங்  சொன்னதைத்  தவறாக  புரிந்துகொண்டிருக்கிறார்”, என்றார்.

“பிரதமர், இம்முடிவுக்கு  வர  எவ்வளவு  சிரமப்பட்டிருப்பார்  என்பதை  மசீச  முழுமையாக  புரிந்து  கொண்டிருக்கிறது.  இன,  சமய  தீவிரவாதத்தைத்  தடுக்கவும்  இன  இணக்கத்தை  மேம்படுத்துவதும்  உதவும்  என்பதால் இம்முடிவை  நாங்கள்  வரவேற்கிறோம்”, என  லுவா கூறினார்.