அம்னோ இருவர்மீது விசாரணை நடத்த ஜாஹுட்-டின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார்களா, போலீசார்?

umnoஅம்னோ  பேராளர்கள்  முகம்மட்  ஜைடி  முகம்மட்  சைட், மஷிடா  இப்ராகிம்  ஆகியோருக்கு  எதிராக பல  புகார்கள்  செய்யப்பட்டும்  போலீசார்  நடவடிக்கை  எடுக்கத்  தயங்குவது  ஏன்? உள்துறை  அமைச்சர்  பச்சை  விளக்குக்  காண்பிக்கக்  காத்திருக்கிறார்களா  என  டிஏபி  பெருந் தலைவர்  லிம்  கிட்  சியாங் வினவுகிறார்.

அவ்விருவரும்  பிரதமர்,  துணைப்  பிரதமர்,  உள்துறை  அமைச்சர்,  மற்ற  அம்னோ  அமைச்சர்கள்,  தலைவர்கள்  முன்னிலையில்  ஒரு  குற்றச்செயலைப்  புரிந்திருக்கிறார்கள்.

அவர்களின்  சினமூட்டும்  பேச்சு  யுடியூப்பில்  தாராளமாக  பார்க்கலாம்  என்றாரவர்.