மிகுந்த இரைச்சலாக இருப்பதாய் அண்டைவீட்டார் புகார் செய்ததை அடுத்து காஜாங் தேவாயம் ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் காஜாங், பெதானி தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில் போலீஸ் கடைவீடு ஒன்றில் அமைந்திருந்த தேவாலயத்துக்குள் சென்றார்களாம்.
“வழிபாட்டை இடையில் நிறுத்த வேண்டாம் என்று அவர்களிடம் கூறினோம். முடியும்வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டோம்”, என தேசிய எவெங்கலிகல் கிறிஸ்டியன் ஃபெல்லோசிப் (என்இசிஎப்) செயல்முறை செயலாளர் அல்ப்ரெட் தயிஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அவ்விவகாரம் தொடர்பில் பாதிரியாரின் முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்”, என்றாரவர்.
இதன் தொடர்பில் மலேசியாகினி போலீசின் கருத்தைப் பெற முயன்றது. முடியவில்லை.
இதி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு தான். ஆனால் நாங்கள் தினசரி அதிகாலைநேரம் என்று கூட பார்க்காமல் ‘இரைச்சலோடு’ தான் வாழ்கிறோம். நாங்கள் போலிசுக்குப் போக முடியுமா?
அவன்கள் எல்லாம் எந்த நேரமும் ஏதும் செய்யலாம் — நம்முடைய தூக்கத்தை எல்லாம் கெடுக்கலாம்– யாரும் கேட்டால் அது தேச நிந்தனை.
விட்டுகொடுத்து விட்டுக்கொடுத்து நாமே நமக்கு குழி நோன்டிகொண்டோம்
அந்த யானையும், ஈர மரக் கட்டையும் இந்தச் செய்திக்கு கருத்து எழுதாமல் போனது வேடிக்கையாய் இருக்கின்றது!.
வந்துட்டேன் தேனீ, இதுநாள் வரை நானோ அல்லது சாந்தியோ மற்ற சமயத்தை பற்றி தவறாக எழுதியுருக்கோமா? இந்துவா பிறந்தவன் மற்றவர் சமயத்தை இகழ்ந்து பேச மாட்டான், பேசுபவன் இந்துவா இருக்க மாட்டான்.
புலவர் சிந்தாமணி, தேனீ கொட்டுவது என்னையும் சந்தியும்தான், ஆனாலும் புலவரே எனத்தான் சொன்னாலும் இந்த கோமாளிக்கு புரியாது
மதத்தில் ஏறி, எளியவரை நிந்திக்கும், எதிர்க்கும் பலமற்றவரை குனிய, குனிய கொட்டும் எந்த மதக் கொள்கையானாலும், அதனை கையில் எடுத்துக் கொண்டு சட்டம் பேசும் அத்துணை புலவர்களும் மட்டப் படுத்தப் பட தகுதியானாவர்கள்தான்.
உங்கள் வழிப்பாட்டுக்கு மதிப்பும் அதைவிட மரியாதையை கொடுக்கிறோம் . எங்கள் பகுதியில் அமைந்து இருக்கும் ஆலயத்தின் கலை நேர நேரமும் மதிய நேரமும் ஒழிக்கும் பக்தி இசை ஓசைக்கு எதிராக ஒவ்வொரு அடுக்குமாடி பகுதிலும் பெரிய பெரிய ஒலிபெரிகி பொருத்தி அதிகாலையும் மலையும் மிகுந்த சத்தங்கள்களோடு இவர்கள் வழிபடுவதை நாங்கள் இரைச்சல் என்று புகார் கூறினால் தடுக்க போலீசார் வருவார்களா ? இத்தனைக்கும் எங்கள் அடுக்குமாடி நாடு மையத்தில் இவர்களின் வழிபாடு இடம் ,இதையும் தவிர்த்து தற்பொழுது எங்கள் ஊர் தமிழ் பள்ளி அமைந்து இருக்கும் இடத்தின் மிக அருகிலே மிக பெரிய இவர்களின் வழிபாட்டு இடம் .இதானால் பள்ளி பிள்ளைகள் பாடம் கற்பிக்க இரைச்சலாக இருக்கிறது என்று புகார் கூறினால் போலிசார் உடனே நடவடிக்கையில் இறங்குவார்களா ? மற்ற சமயத்தை மதிக்க தெரிந்ததால் எங்கள் பகுதி மக்கள் அதை புரிந்தும் ஏற்றும் நடக்கிறார்கள் .அனால் இவர்களோ இன கலவரத்தை தூண்டும் வகையில் நடப்பது என்ன அநியாயம் .இதற்க்கு போலிசும் துணைக்கு போனால் ,மற்ற மத சமய வழிபாடுகளின் நிலை கேள்விக்குறியே ! குறிப்பாக இந்த நாட்டின் கிருஸ்துவ சமயதினருக்கு மிக பெரிய சவாலாகவே இருக்கிறது இவர்களின் எல்லை மீறிய செயல் .