1952-இல், சீனர்கள் பல மில்லியன் ரிங்கிட் பெறுமதியுள்ள புதுக்கிராமங்களில் குடி அமர்த்தப்பட்டது அவர்கள் இந்நாட்டில் வலுவாகக் காலூன்ற பெரிதும் உதவியதாக ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) உதவித் தலைவர் அப்துல் ரஹ்மான் மாட் டாலி கூறினார்.
“மெர்டேகாவுக்கு சில ஆண்டுகளுக்குமுன், சர் ஹெரோல்ட் பிரிக்ஸ் மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டு தானா மலாயுவுக்குக் குடியேறி வந்த சீனர்களுக்காக தனிக் குடியிருப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்” என இஸ்மா வலைத்தளத்தில் அப்துல் ரஹ்மான் பதிவிட்டிருக்கிறார்.
.
“சுமார் 500,000 சீனர்கள் 509 புதுக்கிராமங்களில் வைக்கப்பட்டனர். இன்றும் அவை உள்ளன. புதுக்கிராமங்களில் வீடுகள், பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
“மலாய்க்காரர்களுக்கு இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படவில்லை. தங்கள் நிலங்கள் குடியேறிகளுக்குப் பிரித்துக் மொடுக்கப்பட்டபோதும் அவர்கள் மனத்தளவில் வருத்தப்பட்டாலும் எதிர்க்கவில்லை; ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
“வரலாற்றில் இதை(மலாய்க்காரர்கள்) விடவும் சிறந்த முஸ்லிம் இனம் உண்டோ?”,என அப்துல் ரஹ்மான் வினவினார்.
மெர்டேகாவுக்குப் முன்னரே பணக்காரர்களாக விளங்கிய சீனர்களும் பிரிட்டிஷ் முதலாளிகளும் மெர்டேகாவுக்குப் பின்னரும் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி இருந்த தொழில்களையெல்லாம் வசப்படுத்திக் கொண்டதால் மலாய்க்காரர்கள் அவர்களுடன் போட்டிபோட முடியாமல் பின்தங்கி விட்டார்கள் என்றாரவர்.
இந்த வரலாற்று உண்மைகளை உணர்ந்து மலாய்க்காரர்கள் தங்கள் சிறப்புரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.
அது அப்போ இப்ப இருக்குறதே சுரண்டுரனுங்கே.
சிறப்பு உரிமை என்பது சிலகாலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்க பட்டது ,அதை சில காலத்தை பலகாலமாக்கி இன்று வரை பயன்படுத்தி , மகாதிர் சொன்னதை போல அவர்கள் இனத்தை சோம்பேறிகளாக ஆக்கிய பெருமை அரசை சாரும்
மகாதீர் ஏற்படுத்திய வசதி மற்றும் வாய்ப்புகளை வளயாங்கட்டிகள் சிறந்த முறையில் பயன் படித்தியிருந்தால் எப்படி எப்படியோ உயர்ந்திருக்கலாம்……ஊதாரிகள்……..எவ்வளவு கொடுத்தாலும் போததாது….