ஜெப்ரி, மகாதிரைப் பழிவாங்கும் உணர்வை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறார்

jef drmசாபா கள்ளக்குடியேறிகள் விவகாரத்துக்கு  டாக்டர்  மகாதிர்மீது  பழிபோடும்  ஜெப்ரி  கிட்டிங்கானை  அம்னோ- ஆதரவு வலைத்தளம் ஒன்று சரமாரியாக  சாடியுள்ளது.

“(ஆர்சிஐ) ஆணையத்தின்  அறிக்கை  மகாதிரைப் பாதுகாக்கும்  ஒரு  ‘கண்துடைப்பு’ என்றவர்  கூறியிருப்பது  மகாதிரை  அரசியல்  ரீதியில்  பழிவாங்கும் உணர்வு இன்னும்  அவரிடம்  இருப்பதைத்தான்  காண்பிக்கிறது”, என்று  MyKmu.Net கூறிற்று.

மகாதிர்  காலத்தில், சாபாவின்  பிரிவினைக்குக்  குரல்  கொடுத்த  ஜெப்ரி உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்டத்தின்கீழ்  தடுத்து  வைக்கப்பட்டிருந்தார். அதுதான்  இந்தப்  பழிவாங்கும்  உணர்வுக்குக்  காரணமாம்.