அன்வார் இப்ராகிம் இன்னமும் ‘டத்தோஸ்ரீ’தான்

datoசிலாங்கூர்  சுல்தான்  அவருக்குக்  கொடுத்த  பட்டத்தைப்  பறித்துக்  கொண்டிருந்தாலும்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமை  இன்னமும்  ‘டத்தோஸ்ரீ’  என்றே  அழைக்கலாம்.

ஏனென்றால் அவருக்கு மேலும்  ஏழு  டத்தோஸ்ரீ  பட்டங்கள்  உண்டு.

பெர்லிஸ்(1995), பேராக்(1995), பகாங் (1990), பினாங்கு (1994),  சாபா  (1994) ஆகியவையும்  மற்ற  மாநிலங்களும்  அவருக்கு அப்பட்டத்தைக்  கொடுத்துள்ளன.

1991-இல் பினாங்கு  அவருக்குக்  கொடுத்த  டத்தோ  பட்டமும்  உண்டு.