சங்கங்கள் பதிவகத்தின் உத்தரவுப்படி கட்சியின் பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்படும் என்பதை மஇகா உறுதிப்படுத்தியது. ஆனால், கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் பதவிக்கு மறுதேர்தல் இல்லை.
2013 ஆண்டு நடைபெற்ற கட்சியின் தேர்தலில் தலைவர் ஜி. பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
இதனை இன்று மஇகா தலைமையகத்தில் அறிவித்த டாக்டர் சுப்ரமணியம் இச்சம்பவம் மஇகாவுக்கு ஒரு “கரும் தினம்” என்று கூறினார்.
சங்கங்களின் பதிவகம் மத்திய செயற்குழு மற்றும் உதவித் தலைவர்கள் பதவிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
நடந்து முடிந்த கட்சி தேர்தலில் காணப்பட்ட முறைகேடுகள் பற்றிய விபரங்களை தருமாறு வலியுறுத்தப்பட்டதற்கு பதிலாக மஇகா தேர்தலில் கட்சி அதன் சட்டங்களையும் சங்கங்கள் சட்டத்தையும் பின்பற்றத் தவறிவிட்டது என்று மட்டும் அவர் கூறினார்.
சங்கங்கள் பதிவகத்தின் கடிதத்தில் மஇகா மறுதேர்தல் நடத்த வேண்டும், பதிய தேர்தல் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, இந்த மறுதேர்தலில் வேட்பாளர்கள் கடந்த ஆண்டு தேர்தலில் நியமிக்கப்பட்ட அதே வேட்பாளர்கள்தான் இருப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
மஇகாவின் மறுதேர்தல் 90 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டும். கட்சி தலைவர் ஜி. பழனிவேல் வெளிநாட்டிலிருந்து வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை நாடு திரும்புகிறார். அதன் பிறகு இது குறித்து விவாதிக்கப்படும் என்றாரவர்.
இந்த மறுதேர்தல் ம இ காவில் இப்போது நிலவும் தலைமை தாகத்தை தீர்க்காது. அரை குறை புது தேர்தல் நடத்துவதால் பூசலும் புலம்பலும் மேலும் சிதறும்.. அப்படியே புதிவர்கள் வந்தாலும் புதுமைகள் ஏதும் நடக்கப போவதில்லை. பழனியின் புதிய சட்டங்கள் அமுலுக்கு வந்து தேர்தல் வரும்போது 2017 ம் ஆண்டு நாட்டின் பொதுத்தேர்தல் வந்துவிடும். பழனி சுப்ரா ஒப்பந்தப்படி பழனிக்கு தலைமை பதவி இல்லை.அடுத்த பொதுத்தேர்தலில் பழனி நிற்க வாய்ப்பு இரா…ஆகவே கால விரையத்தை கணக்கில் கொண்டு மறு தேர்தல் என்பதை திருத்தி இப்போதே புது தேர்தல் மனுதாக்கல் செய்து புது தேர்தல் நடத்தி தெளிவான சிறப்பான தலைவரை கட்சி முடிவு செய்தால் அடுத்த தேசிய பொதுத தேர்தல் முடிவுகள் ம இ காவுக்கு மரியாதைமிக்கதாக இருக்கும்.
மலேசியாவில் பல அரசியல் கட்சிகளில் இந்தியர்கள் ஜெயித்து இருந்தாலும் உரிமையில் தோற்றுள்ளோம். தாய் கட்சி என்ற பெருமைக்கு ம இ கா வித்திட அங்கு தலைமைத்துவ நியாயங்கள்
மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டப்பட வேண்டும். கட்சியின் சட்டங்கள் மக்களின் நன்மைக்கு ஆளுமை செய்ய வேண்டும்.தனி நபர் போர்வைக்கு மீண்டும் சூடு காட்டும் மாயை மறைய வேண்டும்.
சாமிவேலு காலத்தில் அவர் வசதிக்கு சட்டம் தம் சுய வறட்சியால் மக்கள் நம்பிக்கை நாசமா போச்சி, கட்சியின் பேராளர்களும்,
உறுபினர்களும் விரக்தியின் உச்சியில் மாற்று கட்சிகளில் மாற்றம் வேண்டி போயி அங்கும் அவமானம்தான். ஒரு தேசிய இனம் இடம் தெரியாமல் அடிப்பட்டுள்ளது
2017 ஆண்டு அல்லது நாட்டின் 14வது பொதுத்தேர்தல் ம இ கா வுக்கு மிக முக்கியமான தேர்தலாக இருக்கும். நல்ல வேட்பாளர்கள்
மட்டுமே கட்சியின் வெற்றியை உறுதி செய்ய முடியும். இந்த ஒழுங்கு மட்டுமே இன்றைய அரசியலில் ஏமாந்துள்ள சமுதாயத்தை தலை நிமிர செய்யும். ஆளும் கட்சியின் அணியா எதிர்கட்சியின் பிணியா என்பதை இன்றைய ம இ கா தலைவர்கள் முடிவை காட்டிலும் ஏமாந்த மக்கள் ஆவல் மிஞ்சி நிற்கிறது.
ம இ கா முன்னாள் கிளை தலைவர்.
நமது சமுதாயம் பின் தங்கியதற்கு மாஇகவும் ஒரு காரணம்
தலை அறுத்துப் போட்ட கோழி மாதிரி துடிக்கின்றது ம.இ.க.
மஇகா தேர்தலில் கட்சி அதன் சட்டங்களையும் சங்கங்கள் சட்டத்தையும் பின்பற்றத் தவறிவிட்டது என்றால் அன்று தலைவர், துணைத்தலைவர், செயலாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பதவிகளை வகிக்கத் தகுதி உடையவர்களா?. கட்சி உருப்பட, இவர்கள் கூண்டோடு கைலாசம் போவதே மேல். முதுகெலும்பு இல்லாத ஒரு துணைத்தலைவர், சோரம் போன ஒரு செயலாளர், இவர்களுக்கு ஊமைத் துறை தலைவராக இருந்து ஊரைக் கெடுத்த கதையாகிற்று.
Theni? தப்பு இருந்தால் மாற்றி அமைக்க வேண்டும் இல்லை என்றால் திருத்த வேண்டும்………………
ம இ க இன்னும் மலேசியாவில் இருக்கா….. ஓகே ஓகே
பழனியும் புண்ணியம் இல்லை ,சுப்ரமணியமும் புண்ணியம் இல்லை .சரவணனே மா இ காவின் தலைமை பொறுப்புக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என்பது நம்பிக்கை . முதுமை தலைவர்களே சற்று ஒதுங்கி இருந்து ம இ காவை மீண்டும் தலைநிமிர்ந்து செல்ல வழிவகுக்க கட்சியை சரவணன் மாதிரி துடிப்புடன் செயலாற்றும் ஒரு மிக சிறந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிக்கு ஆலோசகராக சுப்ரமணியம் செயலாற்றினால் மட்டுமே ம இ கா மருமலற்சியோடு செயல்படும் .முதுமை தளர்ந்து போன தலைவர்களிடம் மீண்டும் ம இ காவை ஆளுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திகொடுத்தால் மீண்டும் இந்த ம இ காவை ஆண்டவன் வந்தாலும் காப்ற்றமுடியாது .தேர்தல் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பழனிவேலு நிச்சயம் பதவி விலகவேண்டும் ,ஆனால் கட்சிக்கு சுப்ரமணியம் தலைமை பொறுபேற்க வேண்டும் என்பது தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பொருந்தாதே விசியமே ,அவரும் சற்று தளர்ந்துதான் காணபடுகிறார் ,அதிகமாக எதற்கும் வாயை திறப்பதும் இல்லை ,அத்திபுத்ததுபோல் கடந்த ஒருவாரமாக மறைமுகமாக பழனிவேலுவை தாக்கிவருகிறார் .இப்படிதான் சாமிவேலுவும் கட்சியை பழனிவேலு சிறந்த முறையில் வழிநடத்துவார் என்று நம்பி ஒப்படைத்தார் பின்னால் என்ன நடந்தது என்பதை தற்பொழுது அனைவரும் அறிவோம் .ஆகையால் பழனியும் வேண்டாம் சுப்ரமணியமும் வேண்டாம் கட்சியை சரவணனிடம் ஒப்படையுங்கள் ,பலகட்சியில் சிதரிகிடக்கும் இந்தியர்களை மீண்டும் ஒரே கூரையின் கீல் இணைக்கும் மாபெரும் சக்தி தற்பொழுது ம இ காவின் சரவணனிடம் மட்டுமே உள்ளது . இழந்த செல்வாக்கையும் நம்பிக்கையும் ம இ கா பெறவேண்டும் என்றால் தள்ளாடும் வயதில் இருக்கும் தலைவர்களிடம் கட்சியை விட்டுகொடுகாமல் வீரநடை போட்டு சிங்கமாக செயல்படும் ஒருவரிடம் கட்சியை ஒப்படைப்பது மிக சிறந்த தேர்வு ,அதற்க்கு தற்பொழுது பொருத்தமான தேர்வு சரவணன் ஒருவர் மட்டுமே .பழனியும் வேண்டாம் ,சுப்ரமணியமும் வேண்டாம் .
ம.இ.க வில் உள்ள குறைகளை களைந்து விட்டு புதிய தலைமைத்துவத்தில் எழுச்சி பெற வேண்டும். அதற்க்கு சாமிவேலுமாதிரி ஒரு தைரியமா பேசக்கூடிய தலைவர் வந்தால் நல்லது. ம.இ.கவை குறைசொல்லும் சொல்லுவோர் முகத்தில் கரியை பூச வேண்டும்.
ம .இ.கா மறு தேர்தல் நடத்தினால் என்ன ,நடத்தாமல் போனால்
என்ன ,அதனால் சமுதாயதிற்கு ஒரு பயனும் இல்லை நைனா.
ம.இ.கா.வில் மறுதேர்தல் தானே வெச்சுட்டா போச்சி..! ம.இ.கா.வை மட்டமாக விமர்சனம் செய்யும் பத்திரிக்கைகளை விரைவில் உதைப்பேன் என்கிரார்றே சரவணன் அவரையே தலைவனாக்கி விடுவோம்..? மக்கள் மூச்சி விட்டாலும் மக்களையும் உதைக்கலாம் அல்லவா..?
ம இ கா துணைத தலைவர் ம இ கா வுக்கு கருப்பு நாள் என்கிறார்.
நடப்பியல் அரசியலில் நிர்வாக கோளாறுகள் தேர்தல் உப்பூசம் இல்லாத அரசியல் கட்சிகள் இல்லை எனலாம்..
இப்பாடி தலைவர்கள் எல்லாம் மூர்க்கத்தனமாக கருப்பு தினம் ,சிவப்பு தினம் என்று எதிர்வினை விமர்சனம் செய்தால், இவர்கள் தலைமைத்துவ சிந்தனையை என்ன சொல்வது ? புல்லை விதைத்தார்கள் புடுங்கிதான் ஆக வேண்டும்.அரசியலில் “மனிதம் செய்யும்”கருப்பு தினம் என்றால் என்ன? பேராளர்கள் உரிமை சாம்பலா?
தேர்தலின் போது பழைய அம்னோ செல்லாத போனபோது …உடனே மறு நாளே புதிய அம்னோவந்தது !அதுதான்.அதுதான் அரசியல் சாணக்கியம் , திறமையாகும் .
ROS தூங்கும், தட்டி விட்டதும் மறு தேர்தல்… புதிய தேர்தல்… என்று சொல்லும் .இதில் எது சரி? இரண்டுக்கும் கட்சி சட்டத்தில் விளக்கம் உண்டா? ம இ க சட்டம் செய்த டான் ஸ்ரீ G என்ன பொம்மையா ?
உலகில் எங்குமிலாத அளவுக்கு ஒரு அரசியல் கட்சி 5 நாட்களுக்கு மாநாடு நடத்தி 700 தீர்மானங்கள் போட்டு இன பூசலை முதன்மை ஆக்கிவுள்ளது. ஆனால் தேச நிந்தனை இல்லை? தலைவர்கள் இன உரிமை ,மத உரிமை, மொழி உரிமை பேச வேண்டாம் என்றார்கள். அனால் ஒருத்தன் கிளிங் என்று வசைபாடினான். ம இ கா ஒன்றும் கேற்க வில்லை.
ம இ கா தலைவர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அவர் வெளி ஊர் போய் விட்டாராம். ROS மாநாட்டை தள்ளி வைத்து விட்டது. தலைவர் இருக்கையில் துணை தலைவர் அடுத்த மறு தேர்தல் என்கிறார் ? Re election என்றால் re nomination என்றுதான் பொருள் படும்? எதை ம இ கா செய்ய போகிறது?
மறுதேர்தல் வைத்து பழனி பேராளர்களை சோதித்து விடலாம். சுப்ரவும் சரவணனும் அடுத்த பொது தேர்தலுக்கு தலைமைத்துவ ஆளுமைக்கு தாயராகி விடலாம். ம இ கா வின் மறுமலர்ச்சி பாகதானில் தவிக்கும் இந்தியர்களை காப்பாத்தலாம்.
தலைவர் அல்லது நிர்வாக செயலர் அல்லது பொது செயலர் ROS விசாரணைககு பதில் சொல்ல வேண்டாமா? ROS சொன்னா செய்யணுமா? இதில் மாநாட்டு தேர்தல் தலைவர் ஊமையா? இப்படி தலைவர்கள் தலைமைத்துவம் கோளாறா இருந்தால்…. மக்கள் கேட்டால் “அருகதை” பற்றி பத்திரிக்கைகள் காசு தலைவர்களுக்காக எழுதும்!
ம இ காவில் தலைவர், துணை தலைவர் போட்டி இல்லாத காரணத்தால் கடந்த தேர்தல் காசுக்கு கொசசையானதாம் . வேஸ்ட்டி, .துண்டு , .புடவை , சாப்பாடு கீப்பாடு எல்லாம் அரங்கேறியதாம். நாங்கள் சொல்லவில்லை ,,,,பேராளர்கள் சொன்ன கதைதான்.
இப்படி முக்கிய “இரண்டு” தலைவர் பதவிகள் வேடிக்கை காட்ட, உ தலைவர்கள் மத்திய செயலவைகள் பேராளர்கள் பேயாட்டம் இரவை இரவல் வாங்கி மக்கள் பணம் 5 மில்ல்யனாவது இரண்டு இரவில் சமர்ப்பணம் சங்கமமாகி இருக்கும்.
தீர்வு தான் என்ன ? அதிரிப்தி அடைந்தவர்கள் தேத்தல் சரி இல்லை என்றார்கள். இப்போது தலவேரே சரி இல்லை என்பதால் து தலைவர் கூட்டம் முக்தி அடைந்து ROS போனார்கள்.
மறு தேர்தலை ROS நடத்தபபோவதில்லை ? ROS புதிய தேர்தலை நடத்த புதிய மனுதாக்கல் செய்ய ஆணை பிறப்பித்து இருக்க வேண்டும். மறு தேர்தல் என்பது ROS அடிப்படையில் எல்லா பதவிகளுக்கும் மனு தாக்கல் என்பதுதான் சட்டம். அதுஎன்ன “புத்துத்தேர்தல்” இப்படி ஒன்று சட்டத்தில் இல்லை எனலாம்.
மறு தேர்தல் என்பது புதிய தேர்தல்தான் இதில் தலைவர் து தலைவர் தேர்தல் விடுபட வாய்ப்பில்லை. அது சட்ட ஒழுங்கும் அல்ல? ம இ கா சட்டம் இதைதான் சொல்லுது ..போய் பாருங்கள்.
இப்போது தெலுங்கு சகோதர்கள் தங்களை வேற தெலுங்கர்கள் என்று பிறந்த சூராவில் போடா சொல்லி விட்டார்கள் ,தமிழர்கள் ,மலையாளிகள் ,பஞ்சாபிகள் , சிங்குகள் எல்லாம் இந்தியன் பட்டியலிருந்து வெளி ஏறினால் மலேசிய இந்தியர் காங்கிரஸ் புதிய தமிழன் கட்சிக்கு மாறுவது காலத்தின் கட்டாயமாகும்.
mIC செத்து ரொம்ப nalachippa இதுலே உள்ள உறுப்பினன் எல்லாம் …………. குப்பணுங்க அப்பா இவனுங்க ஓசியிலே ………… அடிப்பதை sri mudavile போயி பாருங்கப்பா பாருங்க தலைவன வரவேற்க ஒவ்வொருத்தனுக்கும் ஒரு ………….. அது தெரியுமா மட தமிழனுங்க்களே ?