ஷம்சுடின் சிலாங்கூர் எதிரணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

shamபல  தடவை  பொதுக்கணக்குக் குழு(பிஏசி)த்  தலைவர்  பதவி  கொடுக்கப்பட்டும்  அதை  ஏற்க  மறுத்த  முகம்மட்  ஷம்சுடின்  லியாஸ்  சிலாங்கூர்  எதிரணித்  தலைவர்  பதவியை விட்டும்  விலகினார்.

பதவி  விலகல்  கடிதத்தைச்  சட்டமன்றத்  தலைவர்  ஹன்னா  இயோவிடம்  ஒப்படைத்த  அவர்,  தமக்குக்  கொடுக்கப்பட்டிருந்த  டோயோடா  கேம்ரி  காரையும்  மாநில  அரசிடம்  திருப்பிக்  கொடுத்தார்.

“சிலாங்கூர்  சட்டமன்ற   நிலை  ஆணை 68(1)-இல்  டிசம்பர் 4-இல்  செய்யப்பட்ட  திருத்தம் எதிரணித்  தலைவரே  பிஏசி  தலைவராகவும்  இருப்பார்  என்கிறது.

“அதற்கு  மதிப்பு  கொடுத்து  சிலாங்கூர்  எதிரணித்  தலைவர்  பதவியிலிருந்து  உடனடியாக  விலகுவதை  அறிவித்துக்  கொள்கிறேன்”, என்றாரவர்.