பல தலைமுறைகளாக லாடாங் செகாம்புட் கிராமத்தில் வாழ்ந்து வரும் குடியிருப்பாளர்கள் இப்போது அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
அவர்கள் குடியிருக்கும் இடத்தைக் காலி செய்யும்படி இரண்டு மேம்பாட்டு நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவைக் கொடுத்துள்ளன.
கிராமத் தலைவர் எம்.எல்லையா,64, அக்குடும்பங்கள் 1940-களிலிருந்து அங்கிருந்து வருவதாகக் கூறினார்.
“என் தந்தை இங்கு வேலை செய்தார். நான் இங்குதான் பிறந்தேன், வளர்ந்தேன்.
“இங்குள்ள எல்லாருமே ஒரு காலத்தில் செமாந்தான் தோட்டத் தொழிலாளர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்”, என்றாரவர்.
90 நாள்களுக்குள் இடத்தைக் காலி செய்யக் கோரும் நீதிமன்ற உத்தரவு செப்டம்பர் 8-இல் கொடுக்கப்பட்டது என்றும் எல்லையா கூறினார். அந்தக் காலக் கெடு நேற்றுடன் முடிந்தது.
“34 ஆண்டுகளாக நில உரிமையாளர்கள் முறையான வீடுகளுக்கு ஏற்பாடு செய்வார்கள் எனக் காத்திருந்தோம். இப்போது வீட்டை விட்டு விரட்டப்படுகிறோம். இது நியாயமல்ல”, என்றாரவர்.
80 வருசமா உரான்நிலத்தில் வீடுகட்டி வாழ்ந்தது போதும்,
தாத்தா அப்பா கதையெல்லாம் சொல்லாம காலி பண்ணாமல் என்ன இது வெங்காய போராட்டம்.
முறையான வீடுகள் கட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். அந்த நிலத்தை உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ள ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தின் உரிமையாளர் நீங்கள் என்றால் எந்த மேம்பாட்டு நிறுவனமும் ஒன்றும் செய்ய முடியாதே!
உங்கள் தொகுதி சட்ட மன்ற , நாடாளுமன்ற பொறுப்பாளர்களை விடாதிர்கள்.?
எண்பது வருடங்கள், அறுபது வருடங்கள் என்று வெவேறு தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்கள் ஏன் தங்களுக்கு என்று ஒரு 1000 சதுர அடி நிலமாவது சொந்தமாக வாங்கி வைக்கக வேண்டும் என்று நினைக்கவில்லை?ஏன் நம் தலைவர்கள் அதற்கு வழிகாட்டவில்லை ?பார்க்கும்போது மனம் வருந்துகிறது என்றாலும் நம் பக்கமும் தவறு இருக்கின்றது.
என்ன செய்வது மலேசிய இந்தியன் என்றால் அவனுங்களுகேலாம் இலக்கராம் ஆயிற்றே …நிலம் மேம்பாற்றிகாக விற்க பட்டால் அந்த தோட்ட நிர்வாகத்தை அல்லது நிலம் வாங்கியவரை தோட்டத்தில் வேலை செய்த தொழிளார்களுக்கு வீடு கிடக்க வலி கோனுபவர் யார் ? எங்கே போனது மாநில அரசாங்கம் ? ஆமாம் எப்பொழுதுமே நாம் என்றால் அரசாங்கம் கை கலுவிடுமே ………..இது தான் இந்நாட்டின் நடைமுறை …தனியார் நிலம் அரசாங்கம் ஒன்றும் செய்ய இயலாது ….இதுதான் முடிவு
(80 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த இடத்தைக் காலி செய்ய உத்தரவு ) மாரிப்போனால்தானே ,வாழ்க்கை தரமும் மாறும் .பல தலைமுறைகளாக லாடாங் செகாம்புட் கிராமத்தில் வாழ்வதை வீட பட்டணத்தில் நாகரீகமா வாழ்ந்தால்தான் வாழ்க்கையில் ஒரு மாற்றம் கிடைக்கும் .பிடிவாதமாக இருந்தால் 80 வருசமாக தலைமுறைகளாக லாடாங் செகாம்புட் கிராமத்திலேயே உங்களை குழி தோண்டி புதைக்க வேண்டியதுதான் மிச்சம் .ஏங்கடா இப்படி இருக்கேங்க /கொஞ்சமாவது மாருங்க்கடா
போராடி பயனில்லை, இந்த நாட்டில் எங்கள் வாழ்வு இப்படிதான்
என்று நினைத்து அடுத்த தேர்தலில் இவர்களுக்கே ஒட்டு என்று
உறுதி எடுத்து கொள்ளுங்கள்.
80 வருசமா? நாடு எங்கோயோ போயிருச்சு, அடுத்தவன் நிலத்தில் வீடு கட்டினால் கடைசியில் வெளியேற சொன்னால் ” தாத்தா இருந்தார், அப்பா பிறந்தார், நானும் இங்குதான் பிறந்தேன்” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமெல்லாம் இங்கு வேகாதையா. நிலத்தை வாங்கினவன் இளிச்சவாயனா? நிலத்தை வித்தவன் பார்த்து எதாவது கொடுத்தால்தான் உண்டு,
தமிழன் தல்தேவன்