சிலாங்கூர் எதிரணித் தலைவர் பதவியில் பிஎன்னுக்கு ஆர்வமில்லை

s'gorமாநில  எதிரணித்  தலைவர்  பதவிக்கு இன்னொருவரை  நியமிப்பதில்  பிஎன்  ஆர்வம்  கொண்டிருக்கவில்லை  என  சிலாங்கூர்  அம்னோ  துணைத்  தலைவர்  அப்துல்  ஷுக்கூர்  இட்ருஸ்  கூறினார்.

ஏற்கனவே  எதிரணித்  தலைவராக  இருந்த  சுங்கை பூரோங்  சட்டமன்ற  உறுப்பினர்  ஷம்சுடின்  லியாஸ்  நேற்று  அப்பதவியிலிருந்து  விலகினார்.

எதிரணித்  தலைவர்  பதவி  ஏற்பவர்   பொதுக்  கணக்குக் குழு (பிஏசி)வுக்கும்  தலைவராக  இருக்க  வேண்டும்  என்பதுதான்  பிஎன்  அப்பதவியை  ஏற்பதற்கு  இடைஞ்சலாக இருக்கிறது. பிஏசி  தலைவராக இருப்பவர் “அதிகாரமற்றவராக,  ஒரு  கைப்பாவையாகத்தான்”  இருப்பார்  என  ஷுக்கூர்  கூறினார்.

“தலைவராக  நியமிக்கப்படுபவருக்கு குழு  உறுப்பினர்களைத்  தேர்ந்தெடுக்கும்  அதிகாரம் இருக்க  வேண்டும்.

“அது  இல்லை  என்கிறபோது  அவர்களைச்  சார்ந்தவர்களே  அதில் பெரும்பான்மையாக  இருப்பார்கள்.  (பிஏசி  தலைவராகி) ஒரு கைப்பாவையாக  இருப்பதில்  அர்த்தமில்லை”,  என்றவர்  மலேசியாகினியிடம் தெரிவித்தார்.