ஏப்ரல் 1-இல், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வருவதால் தனியார் மருத்துவக் கட்டணம் உயர்வதை ஆராய வேண்டுமாய் மலேசிய சோசலிசக் கட்சியின் செயல்குழு உறுப்பினரும் சுங்கை சிப்புட் எம்பியுமான டாக்டர் மைக்கல் ஜெயகுமார் பயனீட்டாளர் சங்கங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஜிஎஸ்டி-யால் தனியார் மருத்துவச் சேவைக் கட்டணங்கள் உயரும் என மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்க (ஏஎச்பிஎம்)த் தலைவர் டாக்டர் ஜேக்கப் தாமஸ் கூறியது பற்றிக் கருத்துரைத்தபோது ஜெயகுமார் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
தனியார் மருத்துவர்களின் சேவைக்குச் சுங்கத் துறை 6விழுக்காடு வரி விதிப்பதுதான் இதற்குக் காரணம் என்று ஜேக்கப் கூறியிருந்தார்.
“இவ்விவகாரத்தைப் பயனீட்டாளர் சங்கங்கள் அணுக்கமாக ஆராய வேண்டும்”, என்ற ஜெயகுமார்,, நாட்டில் பொருளாதாரச் சுணக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதால் ஜிஎஸ்டி-யைத் தள்ளிப்போட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, மலேசிய பயனீட்டாளர் சங்கக் கூட்டமைப்பின் (போம்கா) தலைவர் மாரிமுத்து நடேசன், மருத்துவப் பராமரிப்புக்கு ஜிஎஸ்டி-இலிருந்து மொத்தமாக விலக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
எந்த மருத்துவமனையிலும் GST இருக்ககூடாது,
இருந்தால் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் போராட்டம் பண்ன சில அரசியல் கட்சிகள் வாயி திறந்து காத்துக்கிடக்கின்றன.