மஇகா மத்திய செயற்குழு கூட்டம் நடத்தப்படக்கூடாது

 

Mic warpath1மஇகா அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளைத் தவிர்த்து கட்சியின் இதர தலைமைத்துவ பதவிகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) விடுத்திருந்த உத்தரவு குறித்து விவாதிக்க எதிர்வரும் வியாழக்கிழமை கூடவிருக்கும் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது.

நவம்பர் 30, 2013 இல் நடந்த கட்சியின் செயற்குவிற்கான தேர்தல் அங்கீகரிக்கப்படவில்லை என்று ரோஸ் திட்டவட்டமாக கூறியுள்ளதால், கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட மத்திய செயற்குழு சட்டப்பூர்வமானதல்ல. ஆகவே, அது ஒரு கூட்டத்தை கூட்டக்கூடாது என்று மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் டி. மோகன் கூறினார்.

மாறாக, 2009 இல் தேர்வு செய்யப்பட்ட மத்திய செயற்குழுதான் கூடி ரோஸ் விடுத்துள்ள உத்தரவை விவாதித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் mohan_micஎன்றாரவர்.

பிற்பகல் மணி 2 க்கு தொடங்கவிருக்கும் மத்திய செயற்குழுவின் கூட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று டி. மோகன் ரோஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.