பாஸ் கிளந்தான் சட்டமன்றத்தில் ஹுடுட் சட்டவரைவைத் தாக்கல் செய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது போனால் பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து வெளியேறத் தயாரா என கெராக்கான் லிம் கிட் சியாங்-கும் டிஏபி- க்கும் சவால் விடுத்துள்ளது.
டிசம்பர் 29-இல், கிளந்தான் சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் ஹுடுட் பற்றி விவாதிக்கவிருக்கும் வேளையில் டிஏபி பெருந் தலைவர் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார் என கெராக்கான் துணைத் தலைவர் சியா சூன் ஹாய் குறை கூறினார்.
கூட்டரசு அரசமைப்பு முன்எப்போதுமில்லாத வகையில் பெரியதொரு சவாலை எதிர்நோக்கி இருக்கும்போதுகூட லிம்மும் டிஏபி-யும் பிஎன் உறுப்புக்கட்சிகளைக் குறைகூறும் “பொறுப்பற்ற அரசியல் பேச்சுகளை”ப் பேசிவருவது ஏமாற்றமளிப்பதாக சியா கூறினார்.
ஜ.செ.க. ஒரு தீர்க்கமான முடிவை இந்நேரத்தில் எடுக்கத் தவறினால் அதன் மரியாதையும், மானமும் காற்றில் பறக்க வேண்டி வரும். இன மத தீவீரவாதத்திலிருந்து இக்கட்சி நடுநிலை போக்கு உடையது என்பதை நிரூபிக்க இது அவசியம்.
அவன் பினாங்கை எழுதி வாங்காமல் எங்கேயும் போகமாட்டான்.
அது வரைக்கும் மக்கள் கூட்டனி மாங்காய் கூட்டனி தான்.
டி எ பி, அதன் கொள்கையிலிருந்து ஒருகணமும் பின்வாங்கக்கூடாது…. வாங்கவும் வாங்காது என்பது திண்ணம். . அரசமைப்புக்கு ஏற்றவாறு கொள்கையுடன் பீடுநடை போடவேண்டும்.
சிங் சக் சிங் சக் ..
அப்பப்ப இந்த மாதிரி சவால் விட்டுக்கிட்டே இருங்க இல்லாட்டி கெரக்கான் என்று ஒரு கட்சி இருந்ததையே எல்லாரும் மறந்திடுவாங்க.
கெராக்கான் துணைத் தலைவர் சியா சூன் ஹாய் அவர்களே, இங்கே இரண்டே இரண்டுதான் ‘சொய்ங் சொய்ங்’ குறுமுட்டைகள். மற்ற எல்லோரும் தெளிவானவர்களே. ‘டிஏபி பெருந் தலைவர் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார் ‘ என்று சொன்னீர்களே… கிழக்கை மேற்காகத் திருப்பினாரா? வடக்கை தெற்காக திசைத் திருப்பினாரா? இத்தனை ஆண்டுகளாக பாரிசான் உங்களையும் இந்த நாட்டு மக்களையும் சூ__ அடித்ததற்காக முதலில் நீங்களும் ம இ கா வும் ம சீ ச வும் பாரிசானில் இருந்து வெளியாகி நீங்கள் ரோஷம் உள்ளவர்கள் என்று நிரூபியுங்கள். அப்புறம் பக்காத்தானை விட்டு வெளியேறுவதைப் பற்றி அவர் முடிவு சொல்லுவார். என்ன.. அடுத்த பொதுத் தேர்தல் பற்றி நினைத்தவுடனே சிலுவாரிலேயே ‘உச்சா’ போற மாதிரி தெரியுது…அப்பேர் பட்ட சூப்பர்ஸ்டாரே ‘பேண்ட்ல’ உச்சாப் போறப்போ நீங்க எல்லாம் யாரு..
இப்போது எல்லாம் மக்கள் கூட்டானி மாங்கா எல்லாம் விஜயகாந்த் ரேஞ்சுக்கு சவால் விடுகிறார்கள்..