பெர்காசாவும் ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா)வும் கூறிக்கொள்வதுபோல் அவற்றுக்கு மலாய்க்காரர்களிடையே மகத்தான ஆதரவு இருப்பது உண்மையானால் தேர்தலில் போட்டியிடத் தயாரா என பிகேஆர் சவால் விடுத்துள்ளது.
“பெர்காசாவும் இஸ்மாவும் அவற்றின் அதி தீவிர வலச்சாரி, இனவாதக் கருத்துகளுக்கு சமுதாயத்தில் வரவேற்பு உள்ளதாக நம்பினால் ஜனநாயக முறையில் அதைச் சோதித்துப் பார்க்கலாமே”, என பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கூறினார்.
பெர்காசாவை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என அதன் உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான விருப்பம் தெரிவித்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது பாண்டான் எம்பி இவ்வாறு கூறினார்.
வாய்ச்சவடால் தவிர அவர்களுக்கு ஏது துணிச்சல்? அம்னோ அவர்கள் பக்கம் என்பதால் வாய்க்கொழுப்பு அதிகம்! அவ்வளவு தான்!
இத பாருடா..
சென்ற தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினாரே பெர்காசா இப்ரகிம் அலி! மீண்டும் போட்டியா?
சரியாக சொன்னார் ரபிசி.
ரபிசி சொன்னது சரி