முன்னாள் உயர் அரசாங்க அதிகாரிகள், பெருந் திட்டங்களுக்கும் குத்தகைகளுக்கும் அலைபவர்கள் என்பதை உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி ஒப்புக்கொள்கிறாராம். பெர்காசா கூறுகிறது.
அந்த அமைப்பின் உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், பெர்காசாவின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடுமையாகக் குறைகூறியது குறித்து ஜாஹிட் தெரிவித்த கருத்துகள்தாம் அவ்வாறு எண்ண வைக்கின்றன என அது கூறியது. முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவருக்கு அவர் கேட்டது கிடைக்கவில்லை என்பதால் அவர் நஜிப்பைத் திட்டினார் போலும் என ஜாஹிட் கூறியிருந்தார்.
முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் பெரிய, பெரிய திட்டங்களுக்கும் பதவிகளுக்கு, அரசு-தொடர்பு நிறுவனங்களில் இயக்குனராவதற்கும் இன்னும் பலவற்றுக்கும் ஆசைப்படுபவர்கள் என்பது உண்மைதான் என்பதற்கு ஆளும் கட்சித் தலைவரும் அமைச்சருமான ஒருவர் சொல்லிய கருத்தே தக்க சான்று என பெர்காசா உச்சமன்ற உறுப்பினர் அஸ்ருல் அக்மால் ஸஹாருடின் கூறினார்.
சீனனும்.இந்தியனும் தரும் வரிப் பணத்தில் உங்கள் தலைவன் அரசாங்கம் தரும் மானியத்தில் சுகபோகங்களை அனுவபவிகிறான்!
பெரகாச மடதவளைகள் ஜென்மம் செய்த ஒரே நல்ல காரியம் இதுதான்