மரினா: 25 சிறந்த மலேசியர்கள் எழுதிய திறந்த கடிதம் குறித்து நஜிப் ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார்?

 

mahaஜி25 என்ற சிறந்த மலேசியர்கள் அடங்கிய குழு நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி அதனைக் கையாள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப்பிடம் கோரிக்கை விடுத்த அவர்களின் திறந்த கடிதம் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் பிரதமர் நஜிப்பிடமிருந்து எவ்வித எதிர்வினையும் காணப்படவில்லை.

இதனைச் சுட்டிக் காட்டிய மரீனா மகாதிர், “அவர்கள் (ஜி25 குழுவினர்) நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை கேட்டுக் கொண்டனர். அவரது பதிலுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், நாம் அவருடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்”, என்றார்.

ஜி25 குழுவினரின் முன்னெடுப்பை வரவேற்ற மரீனா, தற்போது நாட்டை பீடித்திருக்கும் பிரச்சனைகளைக் களைவதற்கு நாம் ஒன்றாக ஒருmarina தீர்வு காண வேண்டும் என்றார்.

“இப்போது ஏகப்பட்ட அழுத்தங்கள் இருக்கின்றன. நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அமைதியான, நியாயமான முறையில் இவற்றுக்கு ஒரு தீர்வு காண வேண்டும்”, என்று மரீனா கூறினார்.

தமது தந்தை முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஜி25 குழுவினர் வெளியிட்டுள்ள கடிதத்தைப் பார்த்தால் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஆதரவு அளிப்பார் என்று அவர் கூறினார்.

“அக்கடிதத்தைப் பார்க்கையில், அவர் எதிர்ப்பார் என்று நான் நினைக்கவில்லை.

“ஆகவே, அவரும் கூட இக்கோரிக்கையை ஆதரிப்பார் என்று நம்புகிறேன்”, என்று மரீனா இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.