அசுந்தா மருத்துவமனை இறந்துபோன பதின்ம வயது பெண் ஜி.தினேஷா-வின் முழு மருத்துவ அறிக்கையை அவரின் பெற்றோர்களிடம் கொடுக்க வேண்டும் என்கிறார் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம்.
“அது அவர்களின் உரிமை”, என்றும் அவர் வலியுறுத்தினார். என்ன நடந்தது என்பதை விவரிக்கும் முழு அறிக்கையைக் கொடுப்பது வழக்கமான நடைமுறைதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினேஷாவின் மரணத்துக்கு மருத்துவமனையே காரணம் என்று அவரின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக நடந்து கொண்டார்களாம்.
ஆனால், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அம்மருத்துவமனை அவர்களின் குற்றச்சாட்டை மறுக்கிறது.
இவ்விவகாரத்தை ஆராயும்படி அமைச்சின் தனியார் மருத்துவப் பராமரிப்புக் கட்டுப்பாட்டுப் பிரிவைப் பணித்திருப்பதாக டாக்டர் சுப்ரமணியம், தெரிவித்தார்.
மருத்துவ அறிக்கை தர மறுப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வதுப் போல் இருக்கு !
நீதி வேண்டும் …
அசுந்தா மருத்துவமனை அம்னோ அமைச்சருக்கு சொந்தமானதாக இருக்கலாம் அல்லது நிர்வாகியாக இருக்கலாம்.