முன்னாள் டிஎன்பி தலைவர் அனி அரோப் காலமானார்

aniஅனி அரோப்,82, இன்று  காலை  மணி  5.20க்குக்  காலமானார்.

டிஎன்பி  முன்னாள்  தலைவரான  அனி,  இரண்டாண்டுக்  காலமாக  புரோஸ்டேட்  புற்று  நோய்க்காக  சிகிச்சை  பெற்று  வந்தார்.

அவரது  உடல்  ஜாலான்  பங்சார், டிஎன்பி  பாலாய்  இஸ்லாமில்  பொதுமக்கள்  இறுதி  மரியாதை  செய்வதற்காக  வைக்கப்பட்டு  பிற்பகல் ஒரு மணிக்குப்  பிறகு  ஷா  ஆலம்  பெர்குபுரான்  இஸ்லாமில்  அடக்கம்  செய்யப்படும்.

1996-இல்,  டிஎன்பி தலைவராக  இருந்தபோது  அப்போதைய  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  வேண்டிவர்களான  தனியார்  மின் உற்பத்தியாளர்களுடன்(ஐபிபி)  ஒப்பந்தம்  செய்துகொள்ள அனி மறுத்தார். அந்த  ஒப்பந்தம்  ஒருதலைப்பட்சமாக  இருந்ததே  காரணமாகும். அதில்  கையொப்பமிடுவதில்லை  என்பதில்  உறுதியாக  இருந்த  அவர்  கொண்ட  கொள்கைக்காக  பதவியையும்  துறந்தார்.

அந்த  ஒப்பந்தத்தின்படி டிஎன்பி,   ஐபிபி-களிடமிருந்து  கூடுதல்  விலை  கொடுத்து மின்சாரம்  வாங்க  வேண்டிய  கட்டாயத்துக்கு  உள்ளானது.