ஆர்ப்பாட்டம் செய்ததற்காக யுனிவர்சிடி மலாயா மாணவர் தலைவர்களை(யுஎம்8) முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறைகூறக்கூடாது, ஏனென்றால் கடந்த காலங்களில் அம்னோவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது உண்டு.
குர்ஆன் மாணவர்களை ஆர்ப்பாட்டம் செய்யச் சொல்லவில்லை என மகாதிர் நேற்று கினிடிவி-இல் கூறியிருந்ததற்கு எதிர்வினையாக யுனிவர்சிடி மலாயா மாணவர் சங்க முன்னாள் தலைவர் பாஹ்மி சைனல் இவ்வாறு கூறினார். பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான எட்டு மாணவர்களில் இவரும் ஒருவராவார்.
“அம்னோ-பிஎன் மாணவர் ஆர்ப்பாட்டங்கள் பற்றி விவாதிப்பது தேவையற்றது என நினைக்கிறோம். அம்னோ உறுப்பினர்களே 1946-இல் மலாயன் யூனியனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்தானே”, என பாஹ்மி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மகாதிருக்கு வயதாவதால் கடந்த கால நடப்புகளை மறந்து விட்டார்போலும் என்றவர் கிண்டலடித்தார்.
மகா மெகா மொகாதீர்: எதிர்க்கட்சிகளே..பொதுமக்களே…நீங்க வாங்கினா அது லஞ்சம் ஆனால் நாங்க (மிரட்டி) கேட்டு வாங்கினா அது அன்பளிப்பு. நீங்க ஆர்ப்பாட்டம் செஞ்சா அது தேசவிரோதம் . அதையே நாங்க செஞ்சா அது தேச நலன் கருதி. இதுதான் எங்க உம்நோ கட்சியின் உலக மகா தத்துவம்.
அவருக்கு மூலை குழம்பி நிதானம் இல்லாமல் குட்டையை குழப்பி கொண்டு பயந்து உளறி கொண்டு இருக்கிறார் ,பேசாமல் பேர பிள்ளைகளுடன் கடைசி காலத்தை முடித்தால் நன்று …………….