ஞாயிற்றுக்கிழமை, கிளந்தானில் ஹுடுட் சட்டம் கொண்டுவருவது பற்றி மாநில அரசு பாஸ் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் பிகேஆரும் டிஏபியும் கலந்துகொள்ள மாட்டா.
மலேசியாகினி டோனி புவாவைத் தொடர்புகொண்டு வினவியதற்கு, “அதில் கலந்துகொள்ள ஆர்வமில்லை; அது எங்கள் திட்டத்தில் இல்லாத ஒன்று. நாங்கள் ஏன் அதில் கலந்துகொள்ள வேண்டும்?”, என்று எதிர்கேள்வி போட்டார்.
பாஸ் அது விருப்பப்படி நடந்துகொள்ளலாம் என்றும் புவா குத்தலாகக் கூறினார்.
“எனக்கு எதுவும் தெரியாது. இது பாஸ் விவகாரம். எங்களைக் ஆலோசனை கலக்காமல் அவர்களே முடிவு செய்தார்கள். விருப்பம்போல் நடந்துகொள்ள நினைக்கிறார்கள்”, என்று அந்த டிஏபி எம்பி சொன்னார்.
பாஸ்காரன் தான் அம்னோவை துணைக்கு கூப்பிடுரானே நீங்க எதுக்கு போகணும்..?