நான்கு பிள்ளைகளுடன் பத்து காஜாவில் தனித்து வாழும் தாய்மாரான மேரிக்கு மலேசியா நாம் தமிழர் இயக்கம் அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்தது என்று மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் தெரிவித்தார் .
பிறப்பு பத்திரம் இருந்தும் 12 வயதில் அடையாள அட்டையை எடுக்க முடியவில்லை என்று மேரி தெரிவித்தார் . அதனால் பிள்ளைகளுக்கு
பிறப்பு பத்திரம் எடுக்க முடியவில்லை, பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியவில்லை. ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல முடியவில்லை , சொத்துக்களை வாங்க முடியவில்லை, வங்கியில் புதிய கணக்கை திறக்க முடியவில்லை என்று மேரி மனவேதனையுடன் தெரிவித்தார்.
மலேசியாவில் அடையாள அட்டை இல்லாமல் வாழ முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்பட்ட மேரி பல அரசியல் கட்சிகளின் உதவியை நாடினார். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்று மேரி தெரிவித்தார்.
பிறகு , தானாகவே அடையாள அட்டை பதிவு அலுவலகத்திற்கு சென்று அடையாள அட்டையை பெறுவதற்கு பல முயற்சிகளை எடுத்தேன் என்று மேரி தெரிவித்தார். இருப்பினும், அவர்களும் மேரிக்கு சரியான முடிவையும் ஈடுபாட்டையும் கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்த மேரி மலேசியா நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலனை நாடினார் . மலேசியா நாம் தமிழர் இயக்கமும், கலைமுகிலனும் உதவி செய்ய முன்வந்தார் என்று மேரி தெரிவித்தார். பிறகு, கலைமுகிலன் பல போராட்டத்தை சந்தித்து 2012 இல் அடையாள அட்டை பெருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார் என்று மேரி தெரிவித்தார் .
பிறகு, 2013 இல் மேரிக்கு அடையாள அட்டை கிடைத்ததாக கலைமுகிலன் தெரிவித்தார்.
ஒவ்வொரு பெற்றோர்களும் தன் பிள்ளைகளுக்கு பிறப்பு பத்திரமும் , அடையாள அட்டையும் எடுக்க வேண்டியது கட்டாயம் என்று மு.அ. கலைமுகிலன் தெரிவித்தார். இல்லையென்றால் நாம் உரிமைகளையும, உடமைகளையும் , உணர்ச்சிகளையும் இழக்க நேரிடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு. ம.இ.க. அடையாள அட்டைப் பதிவு ‘அட்ரஸ்’ இல்லாமல் பொய்யாகி விட்டதோ?.
MIC இப்போ ROS கூட பதிவு பிரச்னை …!
நீரே சரியாக இயங்கவில்லை , மக்களுக்கு சரியா …சேவையா…?
வாழ்த்துக்கள் …தொடரட்டும் உங்கள் போராட்டம் .. தமிழர்கள் நாளை உங்கள் பக்கம் . மாபெரும் தமிழர் இயக்கமாக வளர வாழ்த்துக்கள்