155 பயணிகளையும் ஏழு பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு இந்தோனேசியாவின் சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்த ஏர் ஏசியா ஏர்பஸ் விமானம் உள்ளூர் நேரம் காலை 5.20-க்கு (மலேசிய நேரம் காலை 6.20) காணாமல் போனது.
காணாமல் போவதற்குமுன் அவ்விமானம், பறக்கும் பாதையில் அடர்த்தியா, மேகங்கள் எதிர்ப்படுவதாகவும் மேகங்களைத் தவிர்க்க சற்றே இடப்பக்கம் விலகிப் பறப்பதாகவும் தெரிவித்தது என ஜகார்த்தா சிவில் விமான கட்டுப்பாட்டு இயக்ககம் கூறியது.
இதனிடையே, ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், காணாமல் போனது ஏர் ஏசியா இந்தோனேசியாவின் விமானம் என்பதால் இச்சம்பவம்மீதான செய்தியாளர் கூட்டம் ஜகார்த்தாவில் நடத்தப்படும் என்று குறுஞ்செய்தி வழி தெரிவித்தார்.
இடப்பக்கமா போனதா அல்ல ஈராக்குக்கு வடபக்கமா போனதா என்று தெரியவில்லை?. விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிருடன் தப்பி பிழைக்க பிராத்திப்போம்.
இப்ப இஷமுடினும் உல் துறை அமைச்சரும் படகு எடுத்து கிட்டு தேடுவானுங்க பாரு கண்டிப்பா கண்டு புடுசிடுவானுங்க
பார்போம் இந்தோனேசியா அரசாங்கத்தின் திறமையை
பயணிகள் அனைவரும் பத்திரமாக வந்து சேர பிரார்த்திப்போம்.
MAS தருத்திரியம் AIRASIA-வையும் பிடித்து கொண்டதா அல்லது
நஜிப்-ஒபாமா சந்திப்பின் அதிர்ஷ்ட விளைவா ?
எது எப்படியோ, AIRASIA விமானத்தில் பயணம் செய்தவர்கள்
உயிருடன் இருக்க வேண்டும் என்று பிராத்திப்போம்.
தேடும் படலத்தில் உதவ மலேசியாவின் நீர் மூல்கிகப்பலை அனுபலாமே … ஏன் இந்த தாமதம் !